அஜித் ரசிகர்களுக்கு AK 61ல இருந்து ஒரு மஜாவான அப்டேட்: அடுத்த ஷெட்யூல் சூட்டிங் சென்னைல தானாம்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தற்போது அவரது 61வது படத்தில் நடித்து வருகிறார்.

ஹெச்.வீனோத் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில காரணங்களால் ஏகே61 படத்தின் ஷூட்டிங்கில் சில மாற்றங்களை படக்குழு செய்துள்ளது.

மூன்றாவது முறையாக தொடரும் கூட்டணி

மூன்றாவது முறையாக தொடரும் கூட்டணி

தனக்கு பிடித்த இயக்குநர்களுடன் தொடர்ந்து வேலைப் பார்ப்பதில் அதிக விருப்பம் கொண்டவர் அஜித் குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை என ஹெச். வினோத்தின் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாகவும் அஜித் - ஹெச் வினோத் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்தப் படத்தையும் முதல் இரண்டு படங்களைப் போல போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இரட்டை வேடங்களில் அஜித்

இரட்டை வேடங்களில் அஜித்

அஜித் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படுபயங்கரமான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். மேலும், அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொக்கைன், வீரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. சென்னையில் உள்ள மெளன்ட் ரோடு போல் செட்டிங் போட்டு, அஜித்தின் பைக் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஓய்வில் இருந்து அஜித்

ஓய்வில் இருந்து அஜித்

ஐதராபாத்தில் தான் சம்பந்தபட்ட காட்சிகளில் நடித்து முடித்த அஜித், அப்படியே உலகம் சுற்றும் வாலிபனாக, பல நாடுகளுக்கு டூர் சென்றார். அங்கிருந்து அவர் எடுத்த போட்டோக்கள் எல்லாம், சோஷியல் மீடியாக்களில் செம்ம வைரலாகின. இந்நிலையில், மீண்டும் சென்னை திரும்பிய அஜித், துப்பாக்கிச் சுடும் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொண்டு, பதக்கங்களையும் வென்று குவித்தார்.

Recommended Video

Singam Puli Funny Speech | AJITH கோவப்படுவாருன்னு சொன்னாங்க | Viruman Press Meet *Kollywood
புனேவுக்கு பதிலாக சென்னையில் சூட்டிங்

புனேவுக்கு பதிலாக சென்னையில் சூட்டிங்

இந்நிலையில், ஐதராபாத்தில் ஷூட்டிங்கை முடித்துவிட்ட படக்குழு, அடுத்த ஷெட்யூலை புனேவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், எதிர்பாராத சில காரணங்களால் அது தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாம். மேலும், தேவைப்பட்டால் மட்டும் புனே சென்று ஷூட்டிங் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். சென்னையில் அடுத்த வாரமே ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதில், அஜித் பங்கேற்பது குறித்தும் விரைவில் தெரிவிக்கப்படும் என படக்குழு கூறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X