Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஒரு கூட்டு கிளியான வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித்… விஜய் ஆண்டனி வெளியிட்ட மேக்கிங் வீடியோ!
சென்னை: விஜய் ஆண்டனி நடித்து வரும் ரத்தம் படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
சிஎஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் மூன்று நாயகிகள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரத்தம் படத்தின் டீசர் அறிவிப்பை மிகவும் வித்தியாசமான மேக்கிங் வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
வாரிசு
படத்துக்காக
விஜய்
வாங்கிய
சம்பளம்…
பாக்ஸ்
ஆபிஸ்
கலெக்ஷனுக்கே
டஃப்
கொடுப்பார்
போல?

விஜய் ஆண்டனியின் ரத்தம்
இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வெரைட்டி காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் செகண்ட் பார்ட்டை இயக்கி ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி, ரத்தம் படத்தில் நடித்து வருகிறார். சிஎஸ் அமுதன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்து வருகின்றனர். ரத்தம் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் படத்தின் டீசர் நாளை (டிச 4) மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

ரத்தம் டீசர் அப்டேட்
தமிழின் முதல் ஸ்பூஃப் சினிமாவான 'தமிழ்ப் படம்' மூலம் பிரபலமானவர் இயக்குநர் சி.எஸ்.அமுதன். அதனையடுத்து அவர் 'ரெண்டாவது படம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். அது இன்னும் வெளியாகாத நிலையில், தமிழ்ப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இந்தப் இரண்டு பாகங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால், சிஎஸ் அமுதன் இயக்கும் ரத்தம் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டுக்கான அப்டேட்டை, இன்னும் வித்தியாசமாக வெளியிட்டுள்ளார் சிஎஸ் அமுதன்.

ஒரு கூட்டு கிளியாக
விஜய் ஆண்டனியும், சிஎஸ் அமுதனும் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, ஒரு மேக்கிங் வீடியோவாக வெளியாகியுள்ளது. அதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித் மூவரும் ஸ்கிரிப்ட் பேப்பர்களுடன் மைக் முன்னால் பேசுவதாக உருவாகியுள்ளது. அப்போது ஒருவரையொருவர் கலாய்த்துகொள்வதும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக இந்த வீடியோவுக்கு 'ஒரு கூட்டு கிளியாக' என்ற பாடலை பின்னணியாக ஒலிக்கவிட்டுள்ளார் அமுதன். வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித் என மூன்று முன்னணி இயக்குநர்களும் ஒரே இடத்தில் ஜாலியாக இருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை கொடுத்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
வெற்றிமாறன் விடுதலை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார். அதேபோல், வெங்கட் பிரபுவும் நாக சைதன்யாவின் கஸ்டடி படப்பிடிப்பில் பரபரப்பாக காணப்படுகிறார். பா ரஞ்சித் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படியான பரபரப்பான சூழலில் மூவரும் ரத்தம் டீசருக்காக ஒன்றிணைந்தது, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில், விஜய் ஆண்டனியின் ட்விட்டரை ஷேர் செய்துள்ள வெங்கட் பிரபு, ரத்தம் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பின்னணியில் ஒலிக்கும் ஒருகூட்டு கிளியாக பாடலை குறிப்பிட்டு, என்ன சாங் என ஜாலியாக ரியாக்ட் செய்துள்ளார்.