Don't Miss!
- News
தலைக்கு மேல் தேர்தல் வேலை! ஆட்டம் காணும் அண்ணாமலையின் மெகா திட்டம்! என்ன பின்னணி?
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - வைரலாகும் சிவாஜி பிரபு போட்டோ
சென்னை: நடிகர் திலகம் சிவாஜியுடன் அவருடைய மகனும் பிரபல நடிகருமான இளையதிலகம் பிரபு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சில நினைவுகளை ரீவைன்ட் செய்து பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கும். செல்பி எடுக்க முடியாத காலகட்டங்களில் பொக்கிஷமான புகைப்படங்கள் நமது முந்தைய தலைமுறையினர் எத்தனையோ சேகரித்து வைத்து உள்ளனர்.

நம்முடைய மறைவிற்கு பிறகும் இந்த உலகில் நம்மை பற்றி பேசும் அளவிற்கு இருக்க வேண்டும் என்றால், அப்படி ஒரு மனிதர் மிக சிறந்த நபராக இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்க வேண்டும். மக்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். அல்லது அட்லீஸ்ட் சினிமா பிரபலமாகவாவது இருக்க வேண்டும்.
சில ஃபோட்டோக்களை பார்க்கும் பொது நமது கடந்த கால நினைவுகள் நம்மை தாலாட்டும். சில ஃபோட்டோக்கள் நமக்கு கண்ணீரை வரழைக்கும். சாதாரண மனிதர்களை பொறுத்தவரையில் நாம் வாழும் இந்த தருணத்தில் நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நாம் பெற்றிருக்கும் பெயர்.

நம் நடத்தை மற்றவர்களுக்கு நாம் செய்த நல்ல விஷயங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு ரீவைன்ட் பட்டன் இருக்க தான் செய்கிறது. இவை அனைத்தையும் ஒருவரின் செயல்பாட்டை வைத்து பேசப்படுவது.
இன்னொரு பக்கம் நம் சிறு வயது ஃபோட்டோ ஏதாவது ஒன்று நம் வீட்டில் திடீரென கண்டெடுக்கப்பட்டால் அதை பார்த்து எவ்வளவு சந்தோஷப்படுவோம் அல்லவா, அப்படி ஒரு நிகழ்வு அனைவருக்குமே நடந்து இருக்கும்.
அப்படி அந்த ஃபோட்டோக்களை நாம் பார்க்கும் வேளையில் நம் மனதுக்குள் ஓடும் எண்ணம் என்னவாக இருக்கும் தெரியுமா. நம் கையில் காலச்சக்கரம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு மீண்டும் அந்த காலத்திற்கே சென்று விடலாமா என்று மனம் ஏங்கும்.
அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜியுடன் அவருடைய மகனும் பிரபல நடிகருமான இளையதிலகம் பிரபு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பொக்கிஷமாக இந்த ஃபோட்டோ பார்க்கப்படுகிறது இது போன்ற போட்டோக்கள். அதுவும் பிரபு என்றால் சொல்லவா வேண்டும்.
ஏராளமான ரசிகர்களுக்கு இந்த போட்டோ ஒரு நல்ல சுவாரஸ்யமான விஷயமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. இளைய திலகம் பிரபு இன்னும் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ஒரு ஆர்ட் எக்சிபிஷன் வைக்க போவதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.