கமல் பிறந்தநாளில் வெளியாகும் அடுத்த பட அப்டேட்: ரேஸில் இருக்கும் சபாஷ் நாயுடு, தேவர் மகன் 2!

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு உற்சாகத்தில் இருக்கும் கமல், அடுத்து இந்தியன் 2வில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்தியன் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளன.

கமல் பிறந்தநாளில் அவர் நடிக்கும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் கொடுத்த நம்பிக்கை

விக்ரம் திரைப்படம் கொடுத்த நம்பிக்கை

சில வருடங்களாக அரசியல் பக்கம் பிஸியாக இருந்த கமல், இன்னொரு பக்கம் 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்து வந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான விக்ரம், திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக 600 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸிலும் பிரம்மாண்டமான ஓப்பனிங் கொடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒருவாரமாக விக்ரம் படத்தின் 100 நாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2வில் பிஸியான கமல்ஹாசன்

இந்தியன் 2வில் பிஸியான கமல்ஹாசன்

விக்ரம் கொடுத்த தரமான வெற்றி, பாதியில் முடங்கி கிடந்த இந்தியன் 2 படத்தை தூசி தட்டி எழுப்பியுள்ளது/. கமல் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் வேற லெவலில் சம்பவம் செய்யும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் 'RC 15' படத்தை இயக்கி வரும் ஷங்கர், தற்போது இந்தியன் 2விலும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இந்தியன் 2 மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

கமல் பிறந்தநாளில் அடுத்த பட அறிவிப்பு?

கமல் பிறந்தநாளில் அடுத்த பட அறிவிப்பு?

கமல்ஹாசன் நவம்பர் 7ம் தேதி தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால், அன்றைய தினம் கமலின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கமல் ஏற்கனவே 'சபாஷ் நாயுடு' என்ற படத்தை தொடங்கினார். லைகா தயாரிப்பில் காமெடியாக உருவாக இருந்த இந்தப் படம், கமலின் கால் முறிவு காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கமலின் பிறந்தநாள் தினத்தில் 'சபாஷ் நாயுடு' படம் குறித்து தகவல் வெளியாகும் என எதிரிப்பார்க்கப்படுக்றது.

ரசிகர்களின் விருப்பம் தேவர் மகன் 2?

ரசிகர்களின் விருப்பம் தேவர் மகன் 2?

இதனிடையே கமல் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் பற்றி அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுத, மகேஷ் நாராயாணன் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. அதேபோல், தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தான் 'தலைவன் இருக்கிறான்' எனவும் தகவல் வெளியானது. இதில், கமலுடன் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கமலின் பிறந்தநாளில் 'தலைவன் இருக்கிறான்' படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X