»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை அனாமிகா வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமியை அவரது அப்பாவிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனாமிகா தமிழில் நடித்து வருகிறார். அவரது வீட்டில் வேலை பார்த்து வந்தவர் திருப்பதியைச் சேர்ந்தபுஷ்பலதா. இவர் சமீபத்தில் காணாமல் போய் விட்டார்.

இந் நிலையில் போலீஸார் அச் சிறுமியை மீட்டு புரசைவாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். நடிகை அனாமிகாவின் வீட்டில்அனைவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதால்தான் வீட்டை விட்டு வெளியேறியதாக புஷ்பலதா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அனாமிகாவின் வீட்டில் அரசல் புரசல் சமாச்சாரங்கள் நடப்பதாகவும், சினிமா உலகப் புள்ளிகள் இரவு பகல் பாராமல் வந்துபோவதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந் நிலையில், தங்களது மகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கும்படி புஷ்பலதாவின் தந்தை மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில்ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது அனாமிகா தாக்கல் செய்த மனுவில், என் வீட்டில் பார்க்கக் கூடாததைப் பார்த்தேன், அதனால் வெளியேறினேன் என்றுபுஷ்பலதா கூறியிருக்கிறார். இதனால் வீட்டைக் காலி செய்யுமாறு சொல்லிவிட்டார்கள். இப்போது வீடில்லாமல் திண்டாடி வருகிறேன்.

புஷ்பலதாவை நான் கொடுமைப்படுத்தவே இல்லை. அவளை நல்லபடியாகவே கவனித்தேன். அவளை பெற்றோரிடம் ஒப்படைப்பதில்எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று கூறியிருந்தார்.

விசாரைணயின் இறுதியில், புஷ்பலதாவை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி காப்பகத்தில் மோகன் மனு கொடுக்க வேண்டும். அவரதுமனுவை காப்பக நிர்வாகிகள் பரிசீலித்து புஷ்பலதாவை ஒப்படைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அனாமிகா தலையிடக் கூடாது என்றுதீர்ப்பளித்தனர்.

Read more about: anamika, chennai, father, girl
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil