»   »  நாகேஷ் திரையரங்கம் படத்திற்கு தடை கோரி ஆனந்த் பாபு வழக்கு: விஷாலுக்கு நோட்டீஸ்

நாகேஷ் திரையரங்கம் படத்திற்கு தடை கோரி ஆனந்த் பாபு வழக்கு: விஷாலுக்கு நோட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகேஷ் திரையரங்கம் படத்திற்கு தடை கோரி நடிகர் ஆனந்த்பாபு தொடர்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆரி, ஆஸ்னா ஜவேரி உள்ளிட்டோர் நடித்துள்ள நாகேஷ் திரையரங்கம் படத்தை முகமது இசாக் இயக்கியுள்ளார். டிரான்ஸ் இந்தியா மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Anand Babu files case against Nagesh Thiraiyarangam movie

இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் கூறியிருந்ததாவது,

என்னுடைய தந்தை நாகேஷ், 1958-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.

அவர் சென்னை தியாகராய நகரில், நாகேஷ் தியேட்டர் என்ற ஒரு திரையரங்கை சொந்தமாக நடத்தினார். டிரான்ஸ் இந்தியா நிறுவன தயாரிப்பில், ஐசக் என்ற முகமது இசாக் என்பவர் இயக்கத்தில், 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திகில் திரைப்படமான இது மிகவிரைவில் வெளியாக உள்ளது.

திரைப்படத்துக்கு 'நாகேஷ் திரையரங்கம்' என்று பெயர் வைப்பதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் எந்த முன் அனுமதியும் பெறவில்லை. என்னுடைய தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த திரைப்படத்தின் பெயர் உள்ளது.

எனவே, 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எங்கள் அனுமதி இல்லாமல் எங்களது தந்தையின் பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அவரது மனு நீதிபதி வி. பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

English summary
Chennai high court has sent notice to producer and director of Nagesh Thiraiyarangam in connection with the case filed by actor Anand Babu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil