»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

குற்றாலத்தில் ஐந்தருவியில் குளித்தபோது சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாக தொடரப்பட்டவழக்கில் நடிகர் ஆனந்த் மற்றும் நடிகர்கள் பாலாசிங், விஜயன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

கமல்ஹாசன் தயாரித்த "சத்யா" படத்தில் அறிமுகமானவர் ஆனந்த். விஜயகாந்த்தின் "பூந்தோட்டக்காவல்காரன்" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாதகாரணத்தால் டி.வி. சீரியல்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி, ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைக் கொலைசெய்து விட்டார். இந்த வழக்கில் பின்னர் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் பேசி பாதிக்கப்பட்டகான்ஸ்டபிளின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க ஆனந்த் ஒத்துக் கொண்டதால் அவ்வழக்குவாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆனந்த் குற்றாலம் சென்றிருந்தார். அங்குள்ளஐந்தருவியில் குடித்து விட்டு பெண்கள் குளிக்கும் பக்கம் குளிக்கச் சென்றுள்ளார் ஆனந்த்.

அவருடன் நடிகர்கள் பாலாசிங், விஜயன் ஆகியோரும் சென்றனர். இதை அங்கிருந்த போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் தடுத்துள்ளார். ஆனால் அவரை ஆனந்த்தும் அவருடன் வந்த நடிகர்களும்சேர்ந்து தாக்கியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ஆனந்த் உள்ளிட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள்ஜாமீனில் விடப்பட்டனர்.

இந்த வழக்கு செங்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி தட்சிணாமூர்த்தி குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த், பாலாசிங் மற்றும் பேரையும் விடுதலைசெய்து உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil