»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

குற்றாலத்தில் பெண்கள் பகுதியில் குளித்த நடிகர் ஆனந்த் கைது

குற்றால அருவியில் பெண்கள் பகுதியில் தான் குளிப்பேன் என நடிகர் ஆனந்த் குடித்துவிட்டு கலாட்டா செய்தார். இதைத் தட்டிக்கேட்ட போலீஸ் அதிகாரியைத் தாக்கினார்.

பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் அறிமுகமான ஆனந்த்துக்கு அவ்வப்போது படங்கள் வரும். திருடா திருடாவில் நடித்தார்.அதன் பின்னர் காணாமலே போய்விட்டார். இப்போது டிவியில் அழுவாச்சி நாடங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது திமுக ஆட்சியில் ஒரு கொலை வழக்கு உள்ளது. குடிபோதையில் ஒரு பெண்ணுடன் காரை ஓட்டி வந்த இவர்போக்குவரத்துக் காவலர் மீது காரை ஏற்றினார். அதில் காவலர் அந்த இடத்திலேயே இறந்தார். ஆனால், சரத்குமார் தலையிட்டுதிமுக தலைமையிடம் பேசி ஆனந்தை காப்பாற்றினார்.

இப்போது மீண்டும் ஒரு போலீஸ்காரைத் தாக்கியுள்ளார் ஆனந்த். தனது மனைவியுடன் குற்றாலம் வந்த இவர் புல் போதையில்இருந்தார். தனது மனைவி, நடிகர் பாலாசிங் ஆகியோருடன் சேர்ந்து நள்ளிரகவில் ஐந்தருவியில் குளிக்க வந்தார்.

வந்தவர் நேராக மனைவியுடன் சேர்ந்து பெண்கள் பகுதியில் குளிக்க வந்தார். இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்றபெண்கள் முகம் சுளித்தனர்.

அப்போது அங்கு காவலில் இருந்த குற்றாலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகையா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.நீங்கள் ஆண்கள் பகுதிக்குச் செல்லுங்கள் என்று கூறிய சப்-இன்ஸ்பெக்டரை ஆனந்த் தாக்கினார். கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்.

இதையடுத்து பொது மக்களும் மற்ற காவலர்களும் சேர்ந்து ஆனந்த், பாலாசிங் மற்றும் அவர்களுடன் வந்த இன்னொரு நபரைப்பிடித்தனர். மூவர் மூதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil