»   »  நடிக்க மாட்டேன் நடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டு, மீண்டும் ஜிவியுடன் ஜோடி போடும் ஆனந்தி!

நடிக்க மாட்டேன் நடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டு, மீண்டும் ஜிவியுடன் ஜோடி போடும் ஆனந்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அய்யய்யே... என்னை பிட்டு பட நடிகை மாதிரி சீரழிச்சிட்டாங்க... இனி த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ரவிச்சந்திரன், ஹீரோ ஜிவி பிரகாஷ் கூட மட்டும் நடிக்க மாட்டேன் என்று கிட்டத்தட்ட சபதமே செய்த நடிகை ஆனந்தி கடைசியில் என்ன செய்தார் தெரியுமா...

அதே ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்!

கத்தி படத்தைத் தயாரித்த லைகா புரொடக்ஷன் நிறுவனம், ஆரம்ப எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றிகரமாக தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகிவிட்டது.

லைகாவின் படங்கள்

லைகாவின் படங்கள்

அடுத்து ரஜினி நடிக்கும் எந்திரன் 2, கமல் நடிக்கும் மருதநாயகம் என பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கவிருக்கிறது. இடையில் சிறு பட்ஜெட் படங்களையும் தயாரிக்கிறது. அதில் ஒன்றுதான் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்.

ஆனந்தி

ஆனந்தி

சாம் ஆன்டன் இயக்கும் இந்தப் புதிய படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் கயல், சண்டி வீரன் நாயகி ஆனந்தி.

த்ரிஷா இல்லனா நயன்தாரா கசப்பு

த்ரிஷா இல்லனா நயன்தாரா கசப்பு

ஆனந்தி ஏற்கெனவே த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்தப் படம் மிக மோசமான அனுபவத்தைத் தந்ததாகவும், தன்னை பிட்டு பட நடிகை மாதிரி இயக்குநர் காட்டிவிட்டதாகவும் சாடியிருந்தார் ஆனந்தி. அந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஹீரோ ஜிவி பிரகாஷுடன் மீண்டும் இணைய மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

சினிமாவுல இதெல்லாம் சாதரணமப்பா

சினிமாவுல இதெல்லாம் சாதரணமப்பா

ஆனால் இப்படிச் சொன்ன அடுத்த இரு மாதங்களுக்குள் மீண்டும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்து, இன்று நடந்த படத் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார் ஆனந்தி.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், பருத்தி வீரன் சரவணன், நான் கடவுள் ராஜேந்திரன், நிரோஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷே இசையமைக்கிறார்.

English summary
Actress Anandhi is joining with GV Prakash again after her worst experience with him in Trisha Illana Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil