கன்னட சினிமாவில் அடுத்த பான் இந்தியா பிரம்மாண்டம்… விஜயானந்த் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு
பெங்களூரு: கன்னடத்தில் அனந்த் நாக் ஹீரோவாக நடித்துள்ள விஜயானந்த் திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆக்சன் ஜானரில் பீரியட் படமாக உருவாகியுள்ள விஜயானந்த் ட்ரெய்லருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
விஆர்எல் நிறுவனம் தயாரித்துள்ள விஜயானந்த் ட்ரெய்லருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

பான் இந்தியா விஜயானந்த்
கேஜிஎஃப். காந்தாரா படங்களின் வெற்றிக்குப் பின்னர் கன்னடத்தில் இருந்து அதிகமான பான் இந்தியா படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது 'விஜயானந்த்' படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. ஆக்சன் ஜானரில் பீரியட் படமாக உருவாகியுள்ள விஜயானந்தை ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ளார். ஆனந்த் சங்கேஷ்வர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனந்த் நாக் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஆக்சனில் மிரட்டும் ட்ரெய்லர்
இந்நிலையில், விஜயானந்த் திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான விஜயானந்த் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தந்தையின் பிரிண்டிங்கில் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் ஹீரோ, தனியாளாக முன்னேறி காட்ட வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறி லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் அரங்கேற ஆக்சனில் களமிறங்கும் ஹீரோ வில்லன்களை பந்தாடுகிறார்.

ஒரு ரூபாய்க்கு நியூஸ் பேப்பர்
ஒருகட்டத்தில் லோக்கல் கேங்ஸ்டர், அரசியல் என விஸ்வரூபமெடுக்கும் ஹீரோ, ஒரு ரூபாய்க்கு நியூஸ் பேப்பர் என்ற திட்டத்தை தொடங்குகிறார். பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து பத்திரிகை தொடங்கும் ஹீரோவுக்கு இன்னும் பிரச்சினைகள் அதிகமாக, அவர் எடுக்கும் முடிவுகளே கதை என ட்ரெய்லரை பார்க்கும் போது புரிகிறது. பீரியட் படமாக உருவாகியுள்ளதால், அதற்கான கலை நேர்த்திகளுடன் விஜயானந்த் உருவாகியுள்ளது. அதேபோல், கோபி சுந்தரின் பின்னணி இசையும் மாஸ் காட்டுகிறது.

விஜயானந்த் ரிலீஸ் தேதி
அனந்த் நாக் ஹீரோவாக நடித்துள்ள விஜயானந்த் படத்தில், ரவிசந்திரன், நிஹால், பாரத் போபண்ணா, சிரி பிரஹலாத், பிரகாஷ் பெல்வாடி உள்ளிட்ட பலரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். கன்னட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், விஜயானந்த் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், விஜயானந்த் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு, படம் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











