என்னது லைகர் தோல்விக்கு அனன்யா பாண்டே தான் காரணமா? ஹாஷ்டேக்கை அதிர விடும் ரசிகர்கள்!

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான லைகர் படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களாக குவிந்து வருகின்றன.

Recommended Video

Liger Public Review |Liger Tamil Cinema Review | Vijay Deverakonda |*Review

இந்தி மற்றும் தெலுங்கு பைலிங்குவல் படமாக உருவான லைகர் படத்தின் தோல்விக்கு ஹீரோயின் அனன்யா பாண்டே தான் காரணம் என ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

#AnanyaPandey ஹாஷ்டேக்கில் பாலிவுட்டின் வாரிசு நடிகை தான் படம் பெரிதும் சொதப்புவதாக நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகைகள் வேண்டாம்

பாலிவுட் நடிகைகள் வேண்டாம்

தயவு செய்து இனிமேல் தெலுங்கு படங்களுக்கு பாலிவுட் நடிகைகள் வேண்டாம். லைகர் படம் மோசமான படம் தான். ஆனால், அதை விட அந்த படத்தில் ஹீரோயின் அனன்யா பாண்டே செய்யும் டார்ச்சர்களைத் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை சாமி என நெட்டிசன்கள் #AnanyaPandey ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அழுகையே

அழுகையே

விஜய தேவரகொண்டா திக்குவாய் உடன் தொண்டத் தண்ணி வத்த கத்தி நடித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் அழுகையே வராமல் கண்களை துடைத்த படி அனன்யா பாண்டே நடிக்கும் காட்சியை ஷேர் செய்து விஜய் தேவரகொண்டா ரசிகர்களே அவரை விளாசி வருகின்றனர். தென்னிந்திய நடிகைகளை படத்தில் போட்டிருந்தால் வேறலெவலில் நடித்து இருப்பார்கள் என கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

புரமோஷன் மட்டும் போதுமா

புரமோஷன் மட்டும் போதுமா

மொக்கையாக படத்தை எடுத்து வைத்து ராஜமெளலி படம் அளவுக்கு புரமோஷன் செய்தால் மட்டும் போதுமா? என ரசிகர்கள் தீபாவளி துப்பாக்கியை வைத்து சாலமன் பாப்பையா சிவாஜி படத்தில் சுடும் காட்சியை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். லைகர் புரமோஷன்களில் விஜய் தேவரகொண்டா திமிரோடு நடந்து கொண்டதையும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

நெப்போ கிட்டுக்கு நடிப்பே வரல

நெப்போ கிட்டுக்கு நடிப்பே வரல

வாரிசு நடிகை என்றால் வாய்ப்புகள் குவிவது வழக்கம் தான். ஆனால், அவர்களின் நடிப்பு ஒரு சில படங்களுக்கு பிறகு தனித்தன்மையோடு இல்லையென்றால் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்றும், ஜீரோவில் இருந்து ஒன்றுமில்லாத நிலைக்கு இந்த படத்தில் அனன்யா பாண்டேவின் நடிப்பு சென்று விட்டதாக ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X