Don't Miss!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- News
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இதைத்தான் சொல்லியிருந்தாரோ? பயோபிக்கில், சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் பிரபல ஹீரோயின் இவர்தான்!
சென்னை: சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் பிரபல தெலுங்கு நடிகை, சில்க்-காக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
Recommended Video
வண்டிச்சக்கரம் பட மூலம் நடிகையாக அறிமுகமானவர், கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இந்தப் படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது,
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்தவர்.

சில்க் இல்லாத படங்கள்
1980 முதல் 1990 வரை சில்க் ஸ்மிதா இல்லாத படங்கள் குறைவு. அனைத்து மொழிகளில் அவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

வித்யாவுக்கு விருது
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையைத் தழுவி பாலிவுட்டில் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் சினிமா உருவானது. இதில் வித்யா பாலன், சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடித்தார். இதில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. மலையாளத்திலும் சில்க்கின் கதையை மையப்படுத்தி படங்கள் வெளியாகின.

முடியாமல் போனது
நடிகர் வினு சக்கரவர்த்தி அவர் வாழ்க்கை கதையை படமாக்க நினைத்தார். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையை கொண்டு மேலும் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. இதற்கு 'அவள் அப்படித்தான்' என்ற டைட்டில் வைத்துள்ளனர். காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

தெலுங்கு நடிகை
விளம்பரப் படங்களை இயக்கியவரும், சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை இயக்கியவருமான கே.எஸ்.மணிகண்டன் இயக்குகிறார். இதில் சில்க் ஸ்மிதாவாக நடிக்க பல நடிகைகளை தேடி வந்தனர். இந்நிலையில் தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

அனசுயா பரத்வாஜ்
ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக விருதுபெற்றுள்ள அனசுயா, தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியின் அருகில் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, புதிய தொடக்கம்.. கோலிவுட் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.