»   »  அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: முதற்கட்ட படப்பிடிப்பை 'விரைந்து' முடித்த சிம்பு!

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: முதற்கட்ட படப்பிடிப்பை 'விரைந்து' முடித்த சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, மஹத், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'.


இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 1980 களில் வருவது போன்ற தோற்றத்தில் சிம்பு இதில் நடித்து வந்தார்.


ஆதிக் ரவிச்சந்திரன்

ஆதிக் ரவிச்சந்திரன்

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்து அவர் ''அன்பானவன் அடங்காதவன் அசராதவன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதற்கு சிம்பு அண்ணாவின் கடின உழைப்புதான் காரணம்'' என்று புகழ்ந்திருக்கிறார்.


யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (50 ஆண்டுகளுக்குப்பின் ஒரு படத்தில் இவ்வளவு பாடல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது)


40 கோடி

40 கோடி

40 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.மைக்கேல் ராயப்பன் குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சொந்தமாகத் தயாரித்து வருகிறார்.


ஜனவரி

ஜனவரி

சிம்பு 3 கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்து 2017 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


கால்ஷீட் சொதப்பலால் 'அச்சம் என்பது மடமையடா' படம் சிக்கலில் இருக்கும்போது ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு சிம்பு கொடுத்த ஒத்துழைப்பை எண்ணி மொத்தக் கோலிவுட்டும் தற்போது வியப்பில் ஆழ்ந்துள்ளது.English summary
Simbu's Anbanavan Asaradhavan Adangadhavan First Schedule Wrpped Up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil