»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் ஜி.வியின் தற்கொலைக்குக் காரணமாக இருப்பதாகக் கருதப்படும் மன்னார்குடி கும்பலின்பினாமியான அன்புச்செழியனிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த மரணத்துக்கு இவர் தான் காரணம் என பல தரப்பினரும் குற்றம் சாட்டியபோதும் இவரை விசாரிக்காமல் 2போன் நம்பர்களை மட்டும் தந்து ஜி.வி.

மரணம் குறித்து தகவல் தெரிந்தால் சொல்லலாம் என சென்னை போலீஸ்அறிவித்தது.

இதனால் அன்புச்செழியனை தப்ப வைக்க முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந் நிலையில்அன்புச்செழியன் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா மீது குற்றம் சாட்டி நேரடியாக ஒரு மனுவழக்கறிஞர் சிவா போலீஸ் கமிஷ்னரிடம் வழங்கினார்.

இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வரை கூட செல்வேன் என்று எச்சரித்துள்ளார்.

இதனால் அன்புச்செழியனை விசாரிக்க வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுள்ளனர்.

அவரிடம் விசாரணைநடந்ததா என்று நீதிமன்றத்தில் இருந்து கேள்விகள் வந்தால் இல்லை என்று பதில் சொல்ல வேண்டிய நிலையில்இருக்கக் கூடாது என்பதற்காக இன்று அவரிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது.

ஆனால், இந்த விசாரணை விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இதனால் இது எந்த அளவுக்கு சரியானவிசாரணையாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil