»   »  அன்புச்செல்வன் ஐபிஎஸ் + டிசிபி ராகவன் = 'என்னை அறிந்தால்' சத்யதேவ் ஐபிஎஸ்

அன்புச்செல்வன் ஐபிஎஸ் + டிசிபி ராகவன் = 'என்னை அறிந்தால்' சத்யதேவ் ஐபிஎஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்புச்செல்வன் ஐபிஎஸ்+டிசிபி ராகவன் = சத்யதேவ் ஐபிஎஸ் என்று என்னை அறிந்தால் பற்றி எடிட்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அதன் நிறை, குறைகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

படம் பற்றி பிரபலங்கள் என்ன தெரிவித்துள்ளனர் என்று பார்ப்போம்,

அனிருத்

என்னை அறிந்தால் படம் மிகவும் பிடித்திருந்தது. தல மற்றும் கௌதம் மேனன் அசத்தியுள்ளனர்.

சிவகார்த்திகேயன்

படம் வெற்றி பெற சத்யதேவ் சாருக்கு மதிமாறனின் வாழ்த்து, உங்களை தியேட்டரில் பார்க்க ஆவலாக உள்ளேன் தல... என்னை அறிந்தால் என்று சிவகார்த்திகேயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சிம்பு

அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்பு முதல் ஆளாக படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, ரொம்ப காலம் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் வந்துள்ளது என்னை அறிந்தால்... மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.

சுரேஷ்

இரண்டாம் பாதி அருமை!. தல ஜமாய்ச்சுட்டார். அன்புச்செல்வன் ஐபிஎஸ்+டிசிபி ராகவன் = சத்யதேவ் ஐபிஎஸ். நன்றி கௌதம் மேனன் சார் என எடிட்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

விவேக்

அனைத்து வகை ரசிகர்களுக்கும் என்னை அறிந்தால் பிடித்துள்ளது. நல்ல கதை எப்பொழுதும் வெற்றி பெறும். என்னை அறிந்தால் அஜீத் சாரின் சிறந்த படம் என்று விவேக் ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளதை நடிகர் விவேக் ரீட்வீட் செய்துள்ளார்.

English summary
Ajith starrer Yennai Arindhaal has got a massive response not only from the fans but also from the celebs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil