அச்சச்சோ.. பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு மூளையில் பிரச்சனை.. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா, சன் டிவியின் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

மகளுடன் ஆங்கரிங்

மகளுடன் ஆங்கரிங்

ஆரம்பத்தில் தான் மட்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் பின்னர் தனது மகள் ஸாராவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனால் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம்

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம்

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அர்ச்சனா. இதில் செய்த குரூப்பிஸத்தால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

கெட் டூ கெதர்..

கெட் டூ கெதர்..

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது தன்னுடைய பிக்பாஸ் நண்பர்களுடன் கெட் டூ கெதர் என கொண்டாடி அந்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மூளையில் திரவ கசிவு

மூளையில் திரவ கசிவு

இந்நிலையில் அர்ச்சனா தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ள ஒரு பதிவு ரசிகர்களை பெரும் கவலையடைய செய்துள்ளது. அதாவது அர்ச்சனாவுக்கு மூளையில் சிஎஸ்எஃப் கசிவு எனப்படும் செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அர்ச்சனா

மருத்துவமனையில் அர்ச்சனா

இதற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சை பெறும் போட்டோக்களை அர்ச்சனா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மூளை சக்தி வாய்ந்தது

மூளை சக்தி வாய்ந்தது

மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, வணக்கம் என் அன்பான இன்ஸ்டா மற்றும் எஃப்பி குடும்பம், நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் !! நான் எப்போதும் என் இதயத்திலிருந்து செயல்படும் ஒரு நபர்! எனவே, என் மூளை வருத்தமடைந்து, என் இதயத்தை விட சக்தி வாய்ந்தது என்பதைக் காட்ட விரும்பியது போல் தெரிகிறது!!

மண்டை ஓட்டில் துளை

மண்டை ஓட்டில் துளை

இப்போது ஒரு சிறிய சிக்கலை உருவாக்கத் தொடங்கியுள்ளது.. அது என் மண்டை ஓட்டின் ஒரு பகுதியில் ஒரு சிறிய துளை உள்ளது, அது நிரப்பப்பட வேண்டும்!! நான் இன்று ஒரு செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவு (பொதுவாக சி.எஸ்.எஃப் கசிவு என அழைக்கப்படுகிறது) அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன்... மூளைக்கு அருகிலுள்ள மண்டை ஓட்டில் சில விசித்திரமான முன்னேற்றங்கள்!! எம்.ஆர்.ஐ ஸ்கேன் எனக்கு மூளை இருப்பதை நிரூபித்துள்ளது!

ஒரு வாரம் ஆகும்

ஒரு வாரம் ஆகும்

எனக்கு காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை அறுவை சிகிச்சை நடைபெறும். நான் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும் !!

இந்த எதிர்பாராத குழப்பத்தின் மத்தியில் நாங்கள் இருப்பதால், எங்களால் அழைப்புகளை எடுக்க முடியாமல் போகலாம், ஆனால் என்னுடைய உடல் நலம் குறித்த அப்டேட்டுகளை இங்கே ஸாரா பகிர்ந்து கொள்வார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்!

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

இந்த கட்டத்தையும் எதிர்த்துப் போராடி வீட்டிற்கு வருவேன் என்று நான் உறுதியளிக்கிறேன், ஜாக்கிரதையாக இருங்கள்!! என் அன்பான "இனிய குடும்பம்" அனைவரையும் நேசிக்கிறேன்! இவ்வாறு அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X