Don't Miss!
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மேடையில் ஒரே குழப்பம்.. ஏகப்பட்ட விஜய்.. பாவனாவின் பதற்றம் !
சென்னை : மாஸ்டர் இசை வெளியீட்டு விழா மேடையில் ஏகப்பட்ட விஜய் இருந்ததால் பதற்றமாக இருந்ததாக தொகுப்பாளர் பாவனா கூறியுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளரான பாவனா சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். இவர் இதற்கு முன் பல இசை வெளியீட்டு விழாக்களையும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர். அதை தாண்டி கடந்த சில வருடங்களா ஐ.பி.எல் போட்டிகளிலும் முன்னணி தமிழ் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார் .

பாவனா மாஸ்டர் படத்திற்கு முன் விஜயின் துப்பாக்கி படத்தை 2012ல் தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்த சமயங்களில் இசை வெளியீட்டு விழாக்கள் பெரிதான பிரம்மாண்டத்தில் நடைபெறுவதில்லை. ஆடம்பரம் இன்றி சிறிய மேடைகளில் படக்குழுவால் குறைந்ததது ஒரு மணி நேரத்திற்குள் நடைபெற்று விடும் .

இதை பற்றி கூறிய பாவனா, துப்பாக்கி இசை வெளியீட்டு விழாவை நான் தொகுத்து வழங்க போகிறேன் என்று எனக்கே 24 மணி நேரம் முன்னர் தான் தெரியும் கடைசி நேரத்தில் தான் சொன்னார்கள். மிகவும் அவசர அவசரமாக இசை வெளியீட்டிற்கு விழாவுக்கு தயாராகி போய் தொகுத்து வழங்கியதை பகிர்ந்தார். ஆனால் மாஸ்டர் வெளியீட்டு விழாவிற்கு ஒரு வாரம் முன்னரே தகவல் வந்து விட்டது அதனால் சரியாக தயாராகிவிட்டேன் என கூறினார் .

மேலும் தனது நண்பரும் சக தொகுப்பாளர் பெயரும் விஜய் தான். அதே நேரத்தில் அந்த மேடை நாயகன் தளபதி விஜய், விஜய் சேதுபதி என ஏகப்பட்ட விஜய். இதனால் குழப்பமாகி பதற்றமடைந்துவிடக்கூடாது என்பதற்காக என் நண்பன் விஜயை நான் வாடா போடா என்றே கூறினேன் என்றார்.
மேலும் தான் ஐபிஎல் மூலம் பல ஊர்களுக்கு சென்றுள்ளேன் உண்மையிலே நகைச்சுவை ரசனை அதிகம் உள்ளவர்கள் தமிழர்கள். அதிலும் தமிழ் மீம் கிரியேட்டர்கள் தான். அவர்கள் மாஸ்டர் வெளியீட்டிற்கு போட்ட அனைத்து மீம்களையும் பார்த்தேன் அனைத்தும் அருமையாக இருந்தது. என்னை கிண்டல் செய்து போடப்பட்ட பல மீம்ஸ்கள் எனக்கே பிடித்தது என கூறினார் .
பாவனாவும் நடிகர் அர்ஜீன் தாஸும் நண்பர்களாம். ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். நீண்ட முயற்ச்சிக்கு பிறகே அர்ஜீனுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதைபற்றி பேசி தான் நான் மாஸ்டர் பட மேடையில் அவரை அழைத்தேன். ஆனால் நேரமின்மை காரணத்தால் அதை ஒளிப்பரப்பவில்லை என வருத்தத்துடன் கூறினார்.