'ஒரே ஜாதகம் தான்.. ஆனா அவரு எங்கேயோ இருக்காரு..' - ட்விட்டரில் டிடி
Recommended Video

சென்னை : தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளை. இவருக்கு இன்று பிறந்தநாள்.
இதே நாளில் தான் நடிகர் சிவகார்த்திகேயனும் பிறந்தார். விஜய் டிவி-யில் பணிபுரிந்த காலத்திலிருந்தே சிவகார்த்திகேயனும், டிடியும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், எனக்கும் அவருக்கும் ஒரே ஜாதகம், அவர் எங்கோ போய்விட்டார், அவரது பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிறந்தாள் பாப்புலர் ஆகிறது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டிடி.

டிடி பிறந்தநாள்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி-யின் பிறந்தநாள் இன்று. இவர் விஜய் டிவி-யின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
உடன்பிறப்பே
டிடி பிறந்த அன்றுதான் இப்போது சினிமாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனும் பிறந்தார். விஜய் டி.வி-யில் தொகுப்பாளராக இருந்ததிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். டிடி சிவகார்த்திகேயனை 'உடன்பிறப்பே' என்று தான் அழைப்பார்.

ஒரே ஜாதகம்
இந்நிலையில், ட்விட்டரில் ஒருவர் டிடி-க்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஒன்றாக வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஒரே ஜாதகம்... இரண்டு பேருமே என்டர்டெயினர்ஸ் எனக் குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
அவரு எங்கேயோ இருக்காரு
அதற்கு பதிலளித்த டிடி, "எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரே ஜாதகம், ஆனா, இப்போ அவரு எங்கயோ இருக்காரு... அவரது பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிறந்தநாளும் பாப்புலர் ஆகிறது. உடன்பிறப்பாக இருப்பதால் இப்படி ஒரு நன்மை" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











