»   »  2 மணி நேரம் வரிசையில் நின்று... ஜனநாயகக் கடமையை ஆற்றிய டிடி

2 மணி நேரம் வரிசையில் நின்று... ஜனநாயகக் கடமையை ஆற்றிய டிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 மணி நேரம் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றினேன் என தொகுப்பாளினி டிடி(திவ்யதர்ஷினி) தெரிவித்திருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவால் திரை நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் வரிசையில் நின்றே ஓட்டுப் போட்டனர்.

Anchor Dhivayadharshini Casting her Vote

இதுகுறித்து சின்னத்திரை தொகுப்பாளினி டிடி ''2 மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டேன். அண்ணா நகர் மக்கள் ஓட்டுப் போடுவதில் அசத்தியிருக்கிறார்கள்.

வயதானவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை என்பது எனக்குத் தெரியாததால் என்னுடைய அம்மாவும் நீண்ட நேரம் வரிசையில் நின்றார்கள்.

பிறகு எனக்குத் தகவல் தெரிந்ததும் அவர்களை அழைத்துக் கொண்டு போய் வாக்களிக்க வைத்தேன்'' என்று கூறியிருக்கிறார்.

நேற்று திரை நட்சத்திரங்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
Anchor Dhivayadharshini Casting her Vote in Anna Nagar on Monday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil