»   »  சமுத்திரக்கனிக்கு ஜோடியாகும் பிரபல டி.வி. தொகுப்பாளினி..!

சமுத்திரக்கனிக்கு ஜோடியாகும் பிரபல டி.வி. தொகுப்பாளினி..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சமுத்திரக்கனிக்கு ஜோடியாகும் பிரபல டி.வி. தொகுப்பாளினி..!- வீடியோ

சென்னை : பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ரம்யா, பளு தூக்கும் வீராங்கனையும் கூட. ரம்யா 'மொழி', 'மங்காத்தா', 'ஓ காதல் கண்மணி', 'வனமகன்' என பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் 'சங்க தலைவன்' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ரம்யா. இந்த 'சங்க தலைவன்' படம் ஈரோடு, சேலம், திருப்பூர் பகுதியில் உள்ள கைத்தறித் தொழிலாளர்களின் பிரச்னையைப் பேசும் விதமாகத் தயாராகிறது.

Anchor playing a role of Samuthirakani's wife

மணிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் நெசவாளர் சங்கத் தலைவராக நடிக்கிறார் சமுத்திரக்கனி. அவரது மனைவி கதாபாத்திரத்தில் விஜே ரம்யா நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

சமுத்திரக்கனி படம் இயக்குவதை ஒத்தி வைத்துவிட்டு இப்போது முழுநேர நடிகராகிவிட்டார். அவர் நடித்து முடித்துள்ள கொளஞ்சி படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதுதவிர ஆண்தேவதை, ஏமாலி, காலா, பேரன்பு, மதுரை வீரன், படங்களில் நடித்து வருகிறார்.

English summary
VJ Ramya is playing the role of Samuthirakani's wife in the film 'Sanga Thalaivan'. Samuthirakani is acting as the leader of the Workers association in this film directed by Manimaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X