»   »  'மாமா மச்சான்னு தான் கூப்பிட்டுக்குவோம்' - துல்கர் பற்றி விஜய் டி.வி ரக்‌ஷன்!

'மாமா மச்சான்னு தான் கூப்பிட்டுக்குவோம்' - துல்கர் பற்றி விஜய் டி.வி ரக்‌ஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர்களில் ஒருவர் ரக்‌ஷன். விஜய் டி.வி-யில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இவர், துல்கர் சல்மான், ரீது வர்மா நடிக்கும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கரின் நண்பராக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது துல்கர் சல்மான் பந்தா இல்லாமல் பழகினார் எனவும், மாமா மச்சான் என்றுதான் கூப்பிட்டுக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார் ரக்‌ஷன்.

தொகுப்பாளர்

தொகுப்பாளர்

விஜய் டி.வி-யின், அது இது எது நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளராக வந்த ரக்‌ஷன் சிரிச்சா போச்சு பகுதியில் பல காமெடி போர்ஷன்களில் நடித்திருக்கிறார். தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ரக்‌ஷன்

ரக்‌ஷன்

சின்னத்திரை பணிகளுக்கு நடுவே சினிமா வாய்ப்பும் தேடிக் கொண்டிருந்தார் ரக்‌ஷன். அவரது ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறது. துல்கர் சல்மான், ரீது வர்மா நடிக்கும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கரின் நண்பராக காமெடியன் ரோலில் நடித்திருக்கிறார் ரக்‌ஷன்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

இந்தப் படத்தில் நடித்தது பற்றி ரக்‌ஷன் கூறியதாவது, "நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த நேரத்தில்தான் எனக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

காமெடி கேரக்டர்

இது போன்ற ஒரு மிகச்சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான கதாபாத்திரமாகும்.

பந்தா இல்லாமல் நடித்தார்

பந்தா இல்லாமல் நடித்தார்

முன்னணி நடிகராகவும், ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும் துளிகூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழகக்கூடியவர் துல்கர் சல்மான். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது மாமா, மச்சான்' என்றுதான் இருவரும் கூப்பிட்டுக்கொள்வோம்" எனக் கூறியிருக்கிறார் ரக்‌ஷன்.

English summary
Vijay TV anchor Rakshan acts in 'Kannum kannum kollaiyadithaal' movie. Rakshan shared his experience with Dulquer in shooting spot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil