»   »  அந்தமான்... இந்தப் படமாவது கை கொடுக்குமா அஜீத் மச்சானுக்கு?

அந்தமான்... இந்தப் படமாவது கை கொடுக்குமா அஜீத் மச்சானுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூமித்தாயை நேசிக்கும் ஒரு புதல்வனின் கதை என்ற அறிவிப்போடு தொடங்கியிருக்கிறது அந்தமான் என்ற புதிய படம். இந்தப் படத்தின் நாயகன் ரிச்சர்ட். ஷாலினியின் அண்ணன், அஜீத்தின் மைத்துனர். ஏகப்பட்ட படங்களில் நடித்தாலும், எதுவும் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமையவில்லை.

அந்தமான் படத்தை சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கிறார்.

Andaman movie launch

கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடல் பாடி நடிக்கிறார்.

கதை, வசனம், பாடல்கள் டி.ஆர்.எஸ்.ரமணி எழுதுகிறார். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இப்படத்தை இயக்குகிறார். எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையமைக்க, ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். கூல் ஜெயந்த் நடனம் அமைக்க, ஜி.ஆர்.அனில் மல்நாட் எடிட்டிங் செய்கிறார். பி.கே.பிரபு சண்டைப் பயிற்சி அளிக்க, சுந்தர்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார்.

Andaman movie launch

"பூமியை நேசிக்கும் ஒருவன் படும்பாட்டையும், தேசத்தைக் காப்பற்ற சேதம் விளைவிப்போரை சூறையாடுவதையும் களமாகக் கொண்ட இந்தக் கதை முன்பகுதி தமிழகத்திலும், பின்பகுதி அந்தமானிலும் படமாகிறது," என்கிறார் இயக்குநர்.

Andaman movie launch

இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ஸ்டண்ட் மாஸ்டரும், கில்ட் செயலாளருமான ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர்கள் சரவணன், மன்சூர் அலிகான் மற்றும் ‘அந்தமான்' படத்தின் நாயகன் ரிச்சர்ட், நாயகி மனோசித்ரா, தயாரிப்பாளர் ஏ.கண்ணதாசன், இயக்குநர் ஆதவன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

English summary
Andaman is a new movie starring by Richard - Manochitra based on terrorism and national integration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil