»   »  'ஓ அண்ணன்மாரே தம்பிமாரே'... பாடலில் அண்டா கதை சொன்ன கங்கை அமரன்!

'ஓ அண்ணன்மாரே தம்பிமாரே'... பாடலில் அண்டா கதை சொன்ன கங்கை அமரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் ஜே சதீஷ்குமார் தயாரிப்பில், சி வேல்மதி இயக்கத்தில் உருவாகியுள்ள அண்டாவ காணோம் படத்தின் ஒற்றைப் பாடல் இன்று வெளியானது.

இந்தப் பாடலின் விசேஷம், நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பாடியிருப்பது. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அண்டாவின் பங்கு என்னவென்பதைச் சொல்லும் இந்தப் பாடலை மதுரகவி எழுத, அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.

Andava Kanom single track released

இன்று காலை 11 மணிக்கு இந்தப் பாடலை தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் தனது சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார்.

அண்டாவ காணோம் படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இது. அவருடன் புதுமுகங்கள் இளையராஜா, சார்வி லஸ்யன், வினோத் முன்னா, அருண் பிரஜித், ஷரவண சக்தி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

English summary
The Single song of Andava Kanom has been released by producer J Satheeshkumar on Saturday
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil