twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆந்திர விஷவாயு கசிவு.. 2020ன் மற்றுமொரு பேரழிவு.. மகேஷ் பாபு உருக்கம் !

    |

    ஹைதராபாத் : ஆந்திர மாநிலத்தில் விஷவாயு கசிவு சம்பவம் 2020ன் மற்றுமொரு பேரழிவு என மகேஷ் பாபு உருக்கமாக கூறியுள்ளார்.

    Recommended Video

    Gas Leakage in Andhra Pradesh , Reason Styrene Gas

    நாடு முழுவதும் தற்போது மக்களின் தினசரி வாழ்க்கை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தியாவிலும் மறக்க முடியாத அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் பல பிரச்சனைகளை இந்த உலகம் சந்தித்திருந்தாலும் தற்போது இந்த வைரஸ் தொற்றால் வரலாறு காணாத பொருளாதார சரிவும் ஏற்பட்டுள்ளது.

    Andhra gas leak Mahesh Babu

    ஓவ்வொரு மனிதர்களுக்குள்ளும் வெவ்வேறு விதமாக செயல்படும் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என பல மருத்துவ வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். எனவே இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டதோடு சரி இன்னும் திறந்தபாடில்லை. திரையரங்குகள், கோவில்கள், சர்ச்கள் மூடல், பேருந்துகள் நிறுத்தம், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓட தடை, எல்லைகள் மூடல் என ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பூட்டுபோட்டுவிட்டனர்.

    Andhra gas leak Mahesh Babu

    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் அனைவரும் வீட்டில் இருந்தபடி தங்கள் வேலைகளை தொடர அரசாங்கம் கட்டளையிட்டது. பல திரைப்பிரபலங்களும், வீட்டில் இருக்கும்படியும், பாதுகாப்புடன் கைகளை அடிக்கடி கழுவி பாதுகாப்பாக இருக்கும் படியும் விழிப்புணர்வு வீடியோக்கள் வாயிலாகவும், பாடல்கள் வாயிலாகவும் மக்களுக்கு அறிவுறுத்தினார். இந்த விழிப்புணர்வு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பேரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

    அட போங்கய்யா.. 'தளபதி 65' அந்த படத்தின் பார்ட் 2 இல்லையாம்.. திடீர் பல்டி அடித்த ஒளிப்பதிவாளர்!அட போங்கய்யா.. 'தளபதி 65' அந்த படத்தின் பார்ட் 2 இல்லையாம்.. திடீர் பல்டி அடித்த ஒளிப்பதிவாளர்!

    Andhra gas leak Mahesh Babu

    பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தன் ரசிகர்களுக்கு அடிக்கடி அறிவுரை கூறி ட்வீட் செய்து வருகிறார். தற்போது, அவர்கள் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஆந்திர மாநிலத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் மயங்கி விழுந்தும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு மனம் உடைந்து போனது. 2020ன் மற்றொரு பேரழிவு என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்க பட்ட அனைவரும் மீண்டு வர நான் பிராத்தனை செய்துகொள்கிறேன் என்று தனது பதிவில் மகேஷ் பாபு கூறியுள்ளார்.

    Andhra gas leak Mahesh Babu

    உலகமே அச்சத்திலும், ஒரு வித பயத்திலும் இருக்கும் இந்த கடின நிலையில் இந்த பரிதாபமும் தற்போது ஆந்திராவில் நடந்துள்ளது. மக்கள் கொரோனாவை பற்றி யோசிப்பார்களா? திடீரென்று ஏற்பட்ட இந்த விஷவாயு கசிவு மாதிரியான சம்பவங்களை பற்றி யோசிப்பார்களா? என்று பலரும் வருத்தத்துடன் தங்களது பதிவை கூறியிருக்கிறார்கள்.

    English summary
    Mahesh Babu has condoled the Andhra gas leak which has claimed several lives.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X