twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் 'தலைவா'வுக்கு சாதமாகிய ஆந்திர அரசியல்

    By Siva
    |

    சென்னை: தெலுங்கானா பிரச்சனை தொடர்பாக ஆந்திராவில் நடந்து வரும் போராட்டங்களால் விஜய்யின் தலைவா படத்திற்கு அதிக ஸ்கிரீன்கள் கிடைக்க உள்ளது.

    ஆந்திர பிரதேசத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானா மக்கள் காங்கிரஸின் முடிவை கொண்டாடுகையில் பிறர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனால் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    பவன் கல்யாண்

    பவன் கல்யாண்

    பவன் கல்யாண் நடித்துள்ள அத்தாரின்டிகி தாரேதி படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் ஆந்திராவில் நடக்கும் போராட்டங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

    அண்ணா

    அண்ணா

    விஜய்யின் தலைவா படம் அண்ணா என்ற பெயரில் வரும் 9ம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. பவன் கல்யாண் படமும், விஜய்யின் படமும் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அதிக ஸ்கிரீன்களில்

    அதிக ஸ்கிரீன்களில்

    தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் தலைவா ரிலீஸ் ஆகிறது. ஆனால் ஆந்திராவில் பவன் கல்யாண் படத்தால் தலைவாவுக்கு அதிக ஸ்கிரீன்கள் கிடைக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்நிலையில் பவன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் தலைவாவுக்கு அங்கும் அதிக ஸ்கிரீன்கள் கிடைக்க உள்ளது.

    விஜய்க்கு நல்லதாப் போச்சு

    விஜய்க்கு நல்லதாப் போச்சு

    பவன் கல்யாண் படம் தள்ளிப் போனது விஜய்யின் தலைவாவுக்கு ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. தலைவாவின் பிரமாண்ட ரிலீஸுக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு இனிய செய்தி ஆகும்.

    English summary
    Pawan Kalyan's Attarintiki Daredi, which was scheduled to hit the screens on august 9 gets postponed because of the ongoing agitations in Andhra. This is a blessing in disguise for Vijay, as his Thalivaa will get more screens in Andhra now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X