twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சையில் சிக்கிய உலக அழகி: ஆனாலும் எப்படி செம்ம கூலா சமாளிச்சிருக்காங்கன்னு பாருங்க!

    |

    அமெரிக்கா: மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுகுறித்த முன்னாள் பிரபஞ்ச அழகியின் கருத்து சர்ச்சையாகி உள்ளது.

    அன்று ராதா..இன்று சீதா.. தினம் தினம் இணையத்தை திணறவிடும் தர்ஷா குப்தா! அன்று ராதா..இன்று சீதா.. தினம் தினம் இணையத்தை திணறவிடும் தர்ஷா குப்தா!

    மிஸ் யுனிவர்ஸ் போட்டி

    மிஸ் யுனிவர்ஸ் போட்டி

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'மிஸ் யுனிவர்ஸ்' என்ற அமைப்பு, ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிக்கான போட்டியை நடத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளம்பெண்கள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றனர். இதில் 2015ம் நடைபெற்ற போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஊர்வசி ரவுத்தேலா மிஸ் யுனிவர்ஸ் டைட்டிலை வென்றார். இவர் தான் தி லிஜெண்ட் திரைப்படத்தில் அண்ணாச்சியின் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டியின் விதிமுறைகளில் மாற்றம்

    போட்டியின் விதிமுறைகளில் மாற்றம்

    இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் 72வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் திருமணமாகாத 18 முதல் 28 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லாத பெண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.. ஆனால், 2023ல் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், திருமணமான பெண்கள், தாய்மார்கள் ஆகியோரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர காணப்படுகிறது. ஆனால், 2020ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மேசாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்ட்ரியா மேசாவின் கருத்து

    ஆண்ட்ரியா மேசாவின் கருத்து

    மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் புதிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மோசா, "இந்த மாற்றத்தை நான் விரும்புகிறேன். கடந்த காலத்தில் ஆண்களால் மட்டுமே எல்லாம் முடியும் என்றிருந்தது. ஆனால், அது இப்போது இல்லை, ஆண்களைப் போல பெண்களும் இப்போது எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்து வருகின்றனர். அதானால், மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன்" என தெரித்துள்ளார்.

    நெட்டிசன்கள் ட்ரோல்

    நெட்டிசன்கள் ட்ரோல்

    மோசாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். காரணம் அவர் 2020; மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சில மணி நேரங்களில், இளைஞருடன் திருமண உடையில் இருக்கும் போட்டோக்கள் வைரலாகின. அதனால், அவர் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை குறிப்பிட்ட நெட்டிசன்கள், மேசாவின் கருத்தை ட்ரோல் செய்தனர்.

    பதிலடி கொடுத்த மேசா

    பதிலடி கொடுத்த மேசா

    நெட்டிசன்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மேசா, செம்ம கூலாக அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது "நான் மெக்ஸிக்கோவில் விளம்பர மாடலாக இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் தான் எனது இன்ஸ்டாவில் இருப்பதாகவும். அந்த போட்டோவில் இருக்கும் இளைஞர் எனக்கு தம்பி மாதிரி, 21 வயதான அவன் எனக்கு குழந்தை" என கூறியுள்ளார்.

    English summary
    Andrea Meza's controversial statement about the Miss Universe beauty pageant
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X