Don't Miss!
- News
மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து பிளவை உருவாக்குகிறார்கள்.. டெல்லி என்.சி.சி.விழாவில் பிரதமர் மோடி
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பிசாசு 2..ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சிகள் நீக்கம்..மிஷ்கின் அதிரடி முடிவு!
சென்னை : பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சிகளை இயக்குநர் மிஷ்கின் அதிரடியாக நீக்கி உள்ளார்.
ராஜ்குமார் பிசுமணி,பூர்ணா,சந்தோஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் லீட்ரோலில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியும் 'பிசாசு 2' படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
தமிழில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ஆகஸ்ட 31ம் தேதி வெளியாகவுள்ளது.
காதல்
நயாகரா..
மகிழ்ச்சியில்
குத்தாட்டம்
போட்ட
ஷிவாங்கி!

பிசாசு
கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், பிசாசு. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார் மிஷ்கின். பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான உறவின் பாட்டு கடந்த ஆண்டு வெளியானது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். மிஷ்கின் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பது இது முதல்முறையாகும்.

பாத் டப்பில் ஆண்ட்ரியா
பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் வேறுவிதமான கதை அம்சத்தைக் கொண்ட கதையாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. அதில், பாத் டப்பில் கையில் சிகரெட்டுடன் இருப்பது போன்ற படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மனதிற்குள் தயக்கம்
பிசாசு படத்தில் ஆண்ட்ரியான ஆடையே இல்லாமல் நடித்துள்ளதாக கூறியிருந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குநர் மிஸ்கின். இந்த படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சியில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்தார். அந்த காட்சியை படமாக்கும் போதே என் மனதிற்குள் ஒரு போராட்டம் எழுந்தது. இருப்பினும், அந்த காட்சியை பார்க்கும் மக்கள் முகம் சுளிக்காத வகையில் அந்த நிர்வாண காட்சியை படமாக்கி இருந்தேன்.

நிர்வாணக்காட்சி நீக்கம்
இருப்பினும் இந்த படத்தை குழந்தைகள் எப்படி பார்ப்பார்கள் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து கொண்டே இருந்ததால், அந்த நிர்வாண காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டேன். பிசாசு படத்தின் கதை ஒரு தாய்க்கும் அவளது மகளுக்கும் இடையிலான கதை. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அந்த படத்தைப் பார்க்கலாம் எந்தவிதமான தயக்கமும் இன்றி இப்படத்தை பார்க்கலாம் என்றார். இத்திரைப்படம் ஆகஸ்ட 31ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.