Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Automobiles
புதிய இ-பைக்கிற்காக இத்தாலி நிறுவனத்தோட இணைந்த ஒகினவா... உலகளவில் 50 டெக்னீசியன்களையும் களமிறக்க திட்டம்!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
10 வருஷமா இது மட்டும் மாறல.. கமலுடன் இருக்கும் போட்டோவை போட்டு ஆண்ட்ரியா போட்ட செம போஸ்ட்!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் 10 வருஷமா இது மட்டும் மாறல என பதிவிட்டு இருக்கும் போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கண்ட நாள் முதல் படத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த ஆண்ட்ரியா கெளதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கோலிவுட்டில் 2007ம் ஆண்டு அறிமுகமானார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் அதே இளமையுடனும் அழகுடனும் நடித்து அசத்தி வருகிறார் ஆண்ட்ரியா.
நான் மிஸ் பண்ண படத்தில் விஜய் சேதுபதி நடித்தார்... நடிகர் பரணி பகிர்ந்த தகவல்!

போல்டான நடிகை
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திலேயே அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய ஆண்ட்ரியா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அஜித்தின் மங்காத்தா படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்த ஆண்ட்ரியா கடந்த 2013ம் ஆண்டு கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

கமலுடன்
கமல்ஹாசன், பூஜா குமார், ராகுல் போஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான விஸ்வரூபம் படத்தில் நடிகை ஆண்ட்ரியா அட்டகாசமாக நடித்து அசத்தி இருப்பார். 'உன்னைக் காணாத' பாடலுக்கு கமலுடன் ஆண்ட்ரியா ஆடிய நடனம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. விஸ்வரூபம் 2 படத்தில் கமலுடன் ராணுவ பயிற்சியில் ஆண்ட்ரியா பங்கேற்ற காட்சிகளும் இடம்பெற்று இருக்கும்.

8 படங்கள் கைவசம்
மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் பேயாக நடித்துள்ள ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்தடுத்து 8 தமிழ்ப் படங்கள் உருவாகி வருகின்றன. அனல்மேலே பனித்துளி, பிசாசு 2, கா, மாளிகை, நோ என்ட்ரி, வட்டம் மேலும், டைட்டில் அறிவிக்காத 2 படங்களும் ரெடியாகி வருகின்றன. படு பிசியாக சினிமாவில் நடித்து வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் செம ஹாட்டான போட்டோக்களை போட்டு டிரெண்ட் செய்து வருகிறார்.

இது மட்டும் மாறல
இந்நிலையில், கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த போது அணிந்திருந்த அதே சேலையுடன் தற்போது நடிகை ஆண்ட்ரியா எடுத்த புதிய புகைப்படத்தை பதிவிட்டு, 10 ஆண்டுகள் ஆன போதும், அந்த சேலையும் தானும் மாறாமல் அப்படியே இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட்டுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் லைக் போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

வயசானாலும்
நடிகை ஆண்ட்ரியா இப்படியொரு போஸ்ட்டை போட்டதும் ரசிகர்கள் வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டுப் போகல என கிண்டல் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர். எப்படி ஆண்ட்ரியா அப்படியே இருக்கீங்க, உங்க அழகின் ரகசியம் தான் என்ன? என அவரது ரசிகர்கள் பியூட்டி டிப்ஸ்களையும் கேட்டு வருகின்றனர்.