»   »  ஆண்ட்ரியா சித்தார்த் இணையும் திகில் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆண்ட்ரியா சித்தார்த் இணையும் திகில் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை ஆண்ட்ரியா பின்னணிப் பாடகியாக இருந்து சினிமாவில் நடிகையானார். முன்பே சில ஆல்பம் பாடல்களை பாடியிருந்தாலும் அவரது குரலுக்கு ஒரு தனி அடையாளம் கிடைத்தது என்னவோ அவர் படத்தில் நடித்ததன் மூலம் தான்.

சமீபத்தில் கூட இயக்குனர் ராமின் 'தரமணி' படத்தில் முக்கிய ரோலில் நடித்தது வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ஆண்ட்ரியாவின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.

'தரமணி' படத்தில் இடம்பெற்ற 'ஒரு கோப்பை வேண்டும்... கொண்டு வா...' பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஆண்ட்ரியா பாடியிருந்தார்.

புதிய படம் :

தற்போது அவர் 'The House Next Door' எனும் திகில் படத்தில் நடிகர் சித்தார்த்துடன் நடிக்கிறாராம். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் எடுக்கப்படுகிறது. இது பற்றி இருவருமே ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கின்றனர்.

அவள் :

ஆண்ட்ரியா நடிக்கும் The house next door திரைப்படம் வரும் நவம்பரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் 'அவள்' எனும் பெயரில் தமிழில் தயாராகி வெளியாக இருக்கிறது.

சித்தார்த் ஹீரோ :

எனது அடுத்த படமான The house next door தமிழில் 'அவள்' எனும் பெயரில் வெளியாக இருக்கிறது. இயக்கம் : மிலிந்த். நவம்பரில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

அவல் :

கங்கிராட்ஸ் ஃபார் அவல்! (எந்த அவள் சொன்னா எந்த அவலுக்கு வாழ்த்து சொல்றாரு பாருங்க)

டார்லிங் :

வாவ்வ்... ஆல் தி பெஸ்ட் மை டார்லிங் என நடிகர் சித்தார்த்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அர்ஜுன்ரெட்டி நடிகை வாழ்த்து :

'ஆல் தி பெஸ்ட் சார்' என சித்தார்த்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே. இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100% காதல்' படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
'The house next door' directed by Milind is produced in Tamil, Telugu and Hindi starred by Siddharth, Andreai. In Tamil, this film is being released in November in the name of 'Aval'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil