»   »  தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்: சித்தார்த்துக்கு ஜோடியாகும் ஆண்ட்ரியா!

தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்: சித்தார்த்துக்கு ஜோடியாகும் ஆண்ட்ரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஜில் ஜங் ஜக் படத்தைத் தொடர்ந்து சித்தார்த் மீண்டும் பிஸியான நடிகராகி விட்டார். தற்போது சசியின் பெயரிடப்படாத படம், மலையாளப்படம் போன்றவற்றில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

Andrea and Siddharth to team up the house next door

இது தவிர தான் சொந்தமாகத் தயாரிக்கும் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் படத்திலும் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். காதல் டூ கல்யாணம் என்ற படத்தை இயக்கிய மிலன்ட் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் சித்தார்த்துக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.இதனை நடிகர் சித்தார்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இப்படத்தின் பிற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் படம் குறித்த முழுமையான விவரங்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தார்த்-ஆண்ட்ரியா முதன்முறையாக இப்படத்தின் மூலம் ஜோடி சேருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Andrea and Siddharth First time to team up for the house next door Multilingual Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil