»   »  விரக்தியில் த்ரிஷா மாதிரியே முடிவு எடுக்கவிருந்த ஆண்ட்ரியா

விரக்தியில் த்ரிஷா மாதிரியே முடிவு எடுக்கவிருந்த ஆண்ட்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil
நிர்வாணமாக நடிக்க ஆண்ட்ரியா ரெடி , பாக்க நீங்க ரெடியா?- வீடியோ

சென்னை: திரையுலகை விட்டு விலகிவிடலாம் என்று முடிவு செய்ததாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை அதே சமயம் பெரிய ஹீரோக்களின் படங்களில் 2 பாட்டுக்கு மட்டும் ஆடிவிட்டு செல்லும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது என்று உண்மையை பளிச்சென்று கூறினார் ஆண்ட்ரியா.

இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

முக்கியமான படம்

முக்கியமான படம்

என் வாழ்க்கையில் தரமணி முக்கியமான படம். நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கொண்ட படம் அது. தரமணி மட்டும் அல்ல ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அருவியும் வெற்றி பெற்றது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரசிகர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். படம் பார்ப்பவர்கள் அந்த பெண் என்ன செய்தது? சும்மா பாடல்களுக்கு வந்து டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு போனது என்கிறார்கள். அழகாக இருப்பதை தவிர்த்து நடிகைகள் நன்றாக நடிக்கவும் வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மது

மது

தரமணி படத்திற்கு பிறகு பல ஸ்க்ரிப்டுகள் வந்தது. அதில் ஒரு இயக்குனர் மது அருந்தி, தம்மடிக்கும் கதாபாத்திரத்துடன் வந்தார். ஏன் என்று கேட்டால் தரமணியில் நான் அப்படி செய்தேன் என்றார். அது என்ன ஆண்கள் மது அருந்தி, தம்மடித்தால் மட்டும் சரியா என்று கேட்பதற்காக தரமணியில் அந்த காட்சி வைக்கப்பட்டது.

திரையுலகம்

திரையுலகம்

தரமணி பட ரிலீஸ் தள்ளிப் போன நேரம் திரையுலகம் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து நடிப்பை விட்டுவிடலாம் என நினைத்தேன். புது பட வாய்ப்பு வந்தபோது எல்லாம் தரமணி எப்பொழுது ரிலீஸாகும் என்று தான் கேட்டார்கள்.

கஷ்டம்

கஷ்டம்

நாம் நடித்த படம் ரிலீஸாகவில்லை என்றால் அது நடிகருக்கு விஷம் போன்றது. சும்மா இருந்து ரிலீஸுக்காக காத்திருப்பது கொடுமை. நல்ல வேலை படம் ரிலீஸாகிவிட்டது என்றார் ஆண்ட்ரியா.

விரக்தி

விரக்தி

த்ரிஷா நடிக்க வந்த புதிதில் படங்கள் ஓடவில்லை. அதனால் சாமி படம் மட்டும் ஹிட்டாகவில்லை என்றால் திரையுலகை விட்டு செல்வது என்று த்ரிஷாவும் முடிவெடுத்திருந்தார். இப்போ மறுபடியும் தலைப்பை படிக்கவும்.

English summary
Andrea said in an interview that she went through a lot when Taramani release got postponed. She even thought about saying goodbye to the industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X