»   »  சொன்னதை கேட்காத ஆண்ட்ரியா மீது செம கடுப்பில் இருக்கும் கமல் ஹாஸன்

சொன்னதை கேட்காத ஆண்ட்ரியா மீது செம கடுப்பில் இருக்கும் கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஸ்வரூபம் 2 படம் தொடர்பாக கமல் ஹாஸன் நடிகை ஆண்ட்ரியா மீது கோபத்தில் உள்ளாராம்.

கடந்த 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு படம் வெளியானது. படத்தின் நாயகனான கமல் ஹாஸன் நாட்டை விட்டே வெளியேறுவது பற்றி எல்லாம் பேசினார்.

Andrea upsets Kamal Haasan

அந்த படத்தின் 2 பாகம் எடுக்கப்பட்டு வந்தது. 90 சதவிகித பணிகள் முடிந்த நிலையில் நிதி நெருக்கடியால் படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட வேலைகளை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளார் கமல்.

ஆண்ட்ரியா நடித்துள்ள காட்சிகளை பார்த்த கமலுக்கு அவரின் நடிப்பில் திருப்தி இல்லையாம். இதையடுத்து கமல் ஆண்ட்ரியாவை அணுகி மீண்டும் அந்த காட்சிகளில் நடிக்குமாறு கூறியுள்ளார்.

ஆண்ட்ரியாவோ மீண்டும் நடித்துக் கொடுக்க மறுத்துவிட்டாராம். இதனால் உலக நாயகன் ஆண்ட்ரியா மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.

English summary
Kamal Haasan is reportedly angry with Andrea after she refused to oblige his words.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil