»   »  சும்மா வந்து விஜய்யுடன் ஆடினால் பட வாய்ப்பு குவியும், அதே...: ஆண்ட்ரியா தில் பேச்சு

சும்மா வந்து விஜய்யுடன் ஆடினால் பட வாய்ப்பு குவியும், அதே...: ஆண்ட்ரியா தில் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil
திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கது...ஆண்ட்ரியாவின் தில் பேச்சு- வீடியோ

சென்னை: ஒரு பெண் எதுவும் செய்யாமல் விஜய்யுடன் வந்து சும்மா டான்ஸ் ஆடிவிட்டு சென்றால் அந்த படம் ஹிட்டானது என்றால் உடனே அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா

வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. இந்நிலையில் அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆண்ட்ரியா கூறியதாவது,

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம்

திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கது. சூப்பர் ஸ்டார்களின் பெயரை சொல்லுமாறு யாரிடமாவது கேட்டால் அவர்கள் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன் என்பார்கள்.

புதுப்படம்

புதுப்படம்

தரமணி படத்திற்கு பிறகு நான் ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. அதே சமயம் ஒரு பெண் எதுவும் செய்யாமல் விஜய்யுடன் வந்து சும்மா டான்ஸ் ஆடிவிட்டு சென்றால் அந்த படம் ஹிட்டானது என்றால் உடனே அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும். அடுத்தடுத்து 4,5 படங்களில் ஒப்பந்தம் ஆவார்.

பாராட்டு

பாராட்டு

தரமணி படம் அனைவருக்கும் பிடித்திருந்தது. என் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி இருந்தும் இன்னும் நான் ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. ஏன்?

டான்ஸ்

டான்ஸ்

சும்மா திரையில் அழகாக வந்து இடுப்பை மட்டும் ஆட்டி, உடல் பாகங்கள் தெரியும்படி உடை அணிந்து நடிக்க மாட்டேன். அது போன்ற கதாபாத்திரங்கள் என்னை திருப்தி படுத்தாது. அதே சமயம் கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பேன்.

நயன்தாரா

நயன்தாரா

தீபிகா படுகோனே ஷாருக்கான், ரன்பிர் கபூர் ஆகியோருடன் நடித்த பிறகே தீபிகா படுகோனே ஆக முடிந்தது. நயன்தாரா விஜய், அஜீத், சூர்யா, ரஜினியுடன் நடித்த பிறகே நயன்தாரா ஆனார். ஆண்ட்ரியா ஏன் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ஆண்ட்ரியா ஆக முடியாது? ஒரு நடிகையின் மதிப்பு அவரின் சக நடிகரை பொறுத்து உள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆண்ட்ரியா.

English summary
Andreah Jeremiah is very bold when she addressed a gathering in a college function. She has talked about the male dominated film industry in which an actress's worth is determined based on her co-star.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil