»   »  கத்திக்கு ஆன்ட்ராய்ட் கேம்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

கத்திக்கு ஆன்ட்ராய்ட் கேம்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி படத்துக்கு தனி ஆன்ட்ராய்ட் கேமை உருவாக்கியுள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி'. தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Android Game for Kaththi

பட வெளியீட்டுக்கு முன்பாக விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ‘கத்தி' படத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் கேம் வெளியிடப்பட்டுள்ளது.

‘3டி'யில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேமில் விஜய்யின் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கடத்தல் மாஃபியா கும்பலிடம் மாட்டியிருக்கும் சமந்தாவைக் காப்பாற்றுவதே ‘கத்தி' கேமின் தீம். வேகமான பைக் சேஸிங், துப்பாக்கி ஷூட்டிங் என பட்டையக் கிளப்புகிறது ‘கத்தி' கேம்.

இதற்கு முன்பு 'கோச்சடையான்', 'அஞ்சான்' ஆகிய படங்களுக்கு மொபைல் கேம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The team of Kaththi has released an android game with Vijay's 3 D image.
Please Wait while comments are loading...