»   »  திடீரென மொட்டை அடித்துக்கொண்ட 'அனேகன்' நடிகை.. ரசிகர்கள் ஷாக்!

திடீரென மொட்டை அடித்துக்கொண்ட 'அனேகன்' நடிகை.. ரசிகர்கள் ஷாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழனி : தனுஷ் ஹீரோவாக நடித்த 'அனேகன்' படத்தில் டாக்டராக நடித்திருந்தவர் மலையாள நடிகை லேனா.

இவர் நிஜத்திலும் மனோதத்துவ நிபுணர் தான். மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டையடித்திருக்கிறார். மொட்டைத்தலை தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லேனா.

அனேகன் நடிகை

அனேகன் நடிகை

தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் மனோதத்துவ டாக்டராக நடித்திருந்தவர் மலையாள நடிகை லேனா. இவர் நிஜத்திலும் மனோதத்துவ நிபுணர் தான். மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

குணச்சித்திர நடிகை

குணச்சித்திர நடிகை

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்கக் கூடியவர் இந்த குணச்சித்திர நடிகை லேனா. வயது குறைவுதான் என்றாலும் கூட, பத்து வயது பையனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இவ்வளவு ஏன், நடிகர் பிருத்விராஜூக்கு கூட அம்மாவாக நடித்துவிட்டார்.

மொட்டைத்தலை

மொட்டைத்தலை

சமீபத்தில் இவர் நடித்த 'இறா' என்கிற படம் வெளியானது. இந்த நிலையில் பழனிக்கு சென்று முருகனை தரிசித்த நடிகை லேனா, நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துள்ளார். மொட்டைத்தலை தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

திகைக்கவைத்த லேனா

திகைக்கவைத்த லேனா

அவரது ரசிகர்கள் சிலர் இது அடுத்த படத்திற்கான கெட்டப்பா என கேட்க, ஏன் பழனி மலை முருகன் என ஒருவர் இருப்பதை மறந்துவிட்டீர்களா என பதில் கேள்வி கேட்டு திகைக்க வைத்துள்ளார் லேனா. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

English summary
Lena is a Malayalam actress acted in the movie including 'Anegan'. He has acted in many films in Malayalam, Hindi and Tamil. He has gone to Palani Murugan temple. Lena released her photo in bald head appearance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X