»   »  அனேகன் ரிலீஸான 2 நாட்களில் ரூ.20 கோடி வசூல்: குஷியில் தனுஷ்

அனேகன் ரிலீஸான 2 நாட்களில் ரூ.20 கோடி வசூல்: குஷியில் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனேகன் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் அமிரா தஸ்துர் நடித்துள்ள அனேகன் படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸானது. அனேகன் உலக அளவில் 701 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

அனேகன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பார்ட்டி

பார்ட்டி

படம் ரிலீஸான அன்று இரவே தனுஷ் தனது நண்பர்களுக்கு வெற்றி பார்ட்டி அளித்தார். அதில் தனுஷின் தம்பி சிம்பு கலந்து கொண்டார்.

ரூ.20 கோடி

ரூ.20 கோடி

அனேகன் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

படத்திற்கு இப்படி அமோக வரவேற்பு அளித்துள்ள உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

வி.ஐ.பி.

வி.ஐ.பி.

தனுஷ், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் ஹிட்டானது. அதையடுத்து வெளியாகியுள்ள அனேகன் படமும் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush tweeted that, #anegan 2 days 20 crores don't know how 2 thank you all for this humongous opening.i feel humbled overwhelmed nd encouraged.#blockbuster'
Please Wait while comments are loading...