twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதவி கேட்டால், வீடியோ கால் வரியானு ஆபாசமா பேசுறாங்க.. கதறி அழுத நடிகை சிந்து!

    |

    சென்னை : மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அங்காடித் தெரு சிந்து, மருத்துவ உதவி கேட்டால் ஆபாசமாக பேசுவதாக பேட்டியில் கதறி அழுதார்.

    நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சிந்து.

    இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் அங்காடித்தெரு, இந்த படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

    நடிக்க சான்ஸ் கேட்டா..ரொம்ப கேவலமா பேசுனாங்க..அங்காடித் தெரு சிந்து வேதனை!நடிக்க சான்ஸ் கேட்டா..ரொம்ப கேவலமா பேசுனாங்க..அங்காடித் தெரு சிந்து வேதனை!

    நடிகை சிந்து

    நடிகை சிந்து

    மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து சிகிச்சைக்கு உதவி கேட்டு பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், 2020ம் ஆண்டு கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருந்த போது தான் எனக்கு மார்பகத்தில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத நிலையில் இருந்ததால், நாளுக்கு நாள் கட்டி பெரியதாகி அதில் இருந்து நீர்வடிய ஆரம்பித்துவிட்டது.

    இன்னும் சரியாகவில்லை

    இன்னும் சரியாகவில்லை

    இதனால், நான் ஒரு தனியார் மருத்துவரை சந்தித்தேன் அவர், எனக்கு அடுத்த நாளே அறுவை சிகிச்சை செய்தார். பொதுநல மருத்துவரான அந்த மருத்துவர் அறுவை சிகிச்சையே செய்யக்கூடாது அவர் ஏன் அறுவை சிகிச்சை செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் சொன்னதால் நான் அங்கு போய் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன். ஆப்ரேஷன் நடந்து மூன்று ஆண்டு ஆகிறது இன்னும் அந்த புண் ஆறவே இல்லை.

    படுத்த படுக்கையாகி விட்டேன்

    படுத்த படுக்கையாகி விட்டேன்

    கேன்சருக்கு யார் யார் என்னென்ன மருத்துவம் சொன்னாங்களோ அங்கே எல்லாம் போய்விட்டேன். ஆனால், எனக்கு சரியாகவில்லை. ஓரளவுக்கு நடமாடிக் கொண்டிருந்தேன். ஆனால், ஜனவரி மாதம் என் மருமகன் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். 27வயதே ஆன என் மகளை அந்த கோலத்தில் பார்க்கவே முடியல, அதிலிருந்து நான் படுத்தபடுக்கையாகி விட்டேன். என் மகள் படித்து இருக்கிறாள் அவளுக்கு முதல்வர் ஏதாவது வேலைகொடுத்தால் நன்றாக இருக்கும்.

    நடிகர் சங்கம் உதவவில்லை

    நடிகர் சங்கம் உதவவில்லை

    கேன்சரால் நான் பாதிக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தேன், அதைப்பார்த்து கோவை சரளா, ஸ்ரீமான்,மயில்சாமி, விவேக், மனோபாலா, பிக் பாஸில் வந்த தனலட்சுமி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் உதவி செய்தார். நான் சின்னத்திரை, வெள்ளித்திரை போன்றவற்றில் நடித்து இருக்கிறேன். எனது நிலைமையைப் பார்த்து சின்னத்திரை சங்கத்தில் இருந்து உதவி செய்தார்கள். ஆனால், நடிகர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. இரண்டு வருடமாக என் நண்பர்கள்தான் உதவி செய்து வருகிறார்கள் என்றார்.

    வீடியோ கால் வரியா

    வீடியோ கால் வரியா

    இப்போது எனக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதால், நான் உதவி கேட்டு பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறேன். அந்த வீடியோவை பார்த்த ஒருவர் இரவு 12 மணிக்கு போன் செய்து, நலம் விசாரிப்பது போல பேசிவிட்டு பின், வீடியோ கால் வரியா? ஒரு பக்கம் மார்புலதானே கேன்சர், இன்னொரு மார்ப்பை காட்டு, 5லட்சம் தருகிறேன் என்று ஆபாசமாக பேசினார் என்று அந்த பேட்டியில் சிந்து கண்ணீர் மல்க கூறினார்.

    English summary
    Angadi theru Sindhu opens up about the struggles has faced breast cancer
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X