»   »  'காளி' படத்தில் 'அங்காடித்தெரு' நடிகை!

'காளி' படத்தில் 'அங்காடித்தெரு' நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காளியான அஞ்சலி | தீபீகா படுகோன் பற்றி தெரியாத ஒன்று-வீடியோ

சென்னை : 'வணக்கம் சென்னை' படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் இரண்டாவது படம் 'காளி'. இந்தப் படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். சுனைனா நாயகியாகவும், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் மேலும் ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோரும் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

'Angaditheru' actress in kaali movie

'அண்ணாதுரை' படத்தில் நடித்துக் கொண்டே, கிருத்திகா உதயநிதி இயக்கிய 'காளி' படத்திலும் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தை தன்னுடைய விஜய் ஆண்டனி பிலிம் கர்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார்.

'Angaditheru' actress in kaali movie

இந்நிலையில், 'காளி' படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகை அஞ்சலி. இதுகுறித்து இயக்குனர் கிருத்திகா உதயநிதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'அஞ்சலியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடன் பணிபுரிய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.

நடிகை அஞ்சலி நடிப்பில் அடுத்து தமிழில் 'பலூன்' என்ற படம் வெளியாக இருக்கிறது. அஞ்சலியின் நடிப்புத் திறமைக்கு ஏற்ப அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

English summary
'Kaali' is the second film directed by Kiruthiga Udayanithi followed by the film 'Vanakkam Chennai'. Vijay Antony is the hero of this film. Now, Actress Anjali is set to join team 'Kaali'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil