»   »  'அங்கமாலி டைரீஸ்' இயக்குநரின் அடுத்த சாதனை!

'அங்கமாலி டைரீஸ்' இயக்குநரின் அடுத்த சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : லிஜோ ஜோஸ், மலையாள சினிமாவின் இளம் முன்வரிசை இயக்குநர். 'அங்கமாலி டைரீஸ்' எனும் ரசிகர்களும், விமர்சகர்களும் மற்ற மொழி சினிமாக்களின் முக்கிய இயக்குநர்களும் கூடப் பாராட்டிய படத்தைக் கொடுத்தவர்.

'அங்கமாலி டைரீஸ்' படத்தை தமிழ் இயக்குநர்கள் சிலரும் பாராட்டி இருந்தார்கள். தான் எடுப்பதுதான் படம் எனும் கொள்கையோடு இருக்கும் இவர் சில நேரம் 'டபுள் பேரல்' போல ரசிகர்களை சோதிக்கும் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

 'Angamaly Diaries' Director's next record

சில மாதங்களுக்கு முன் இவரது டைரக்‌ஷனில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் புதிய முயற்சியாக, கதாநாயகன் - நாயகி என 84 புதுமுகங்களை வைத்து இயக்கி, புதிய சாதனை செய்திருந்தார்.

 'Angamaly Diaries' Director's next record

இப்போது தனது அடுத்த படமான 'ஈ ம யூ' (ஈஷோ-மரியம்-யூசுப்) என்கிற படத்திலும் இன்னொரு சாதனையை செய்துள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப்படத்தை ஆரம்பித்த லிஜோ ஜோஸ், வெறும் பதினெட்டே நாட்களில் முழுப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

கடலோர கிராமம் ஒன்றின் பின்னணியில் நிகழும் இந்த கதையில் செம்பான் வினோத், விநாயகன், இயக்குனர் திலீஷ் போத்தன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். லிஜோ ஜோஸின் சீரிய முயற்சிக்கு புதுமையை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது.

English summary
'Angamaly diaries' director completed his next film in just 18 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil