காதலை சொன்னதும் பயந்துட்டேன்...அனிகா பகிர்ந்த காதல் அனுபவம்
சென்னை : என்னை அறிந்தால் படத்தில் திரிஷா, அஜித்தின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். டீன் ஏஜ் ஆன பிறகும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார். தற்போது வளர்ந்து விட்ட அனிகா, மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவான அனிகா, ஒவ்வொரு வாரமும் புதுசு புதுசாக யோசித்து வித்தியாசமான ஃபோட்டோஷுட்களை நடத்தி, இணையத்தை பரபரப்பாக்கி வருகிறார். புடவையில் கிளாமர் பொங்க இவர் நடத்திய ஃபோட்டோஷுட் லைக்குகளை அள்ளி உள்ளது.
சமீபத்தில் தனது ரசிகர்களுடன் வீடியோவில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார் அனிகா.அதில் ரசிகர்கள் பதிவிட்ட கேள்விகளுக்கு அனிகா பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர், உங்களின் அதிதீவிர ரசிகர் யாராவது உங்களை காதலிப்பதாகவும், அவரின் காதலை நீங்கள் ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அனிகா, இதே போன்ற ஒரு விவகாரம் இமெயிலில் எனக்கு வந்தது. நான் மிகவும் பயந்து விட்டேன். பிறகு அதை அப்படியே புறக்கணித்து விட்டேன் என்றார். மற்றொரு ரசிகர், எப்போதாவது உங்களின் உயரம் பற்றி தாழ்வாக நினைத்திருக்கிறீர்களா என கேட்டார்.
Recommended Video
அதற்கு பதிலளித்த அனிகா, சில நேரங்களில் நினைத்துளேன். ஆனால் 5 அடி 2 அங்குலம் என்பது சரியான உயரம். ஃபோட்டோக்களில் பார்க்கும் போது இதை எனது பிளஸாக பார்க்கிறேன். ஆண்களின் உடை உள்ளிட்ட எந்த உடை அணியவும் இது சரியாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











