»   »  12 ரஜினி "வெறியர்களும்".. ஒரு அழகான அனிமேஷன் "கபாலி"யும்!

12 ரஜினி "வெறியர்களும்".. ஒரு அழகான அனிமேஷன் "கபாலி"யும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி டீசர் ஒரு பக்கம் யூடியூப் திரையை எரித்துக் கொண்டுள்ள வியூஸ்களின் வீச்சு தாங்க முடியாமல்.. இன்னொரு ரஜினி ரசிகர்கள் குழு ஒன்று இணைந்து உருவாக்கிய அனிமேஷன் கபாலியும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அனிமேஷன் கபாலியும் லட்சக்கணக்கில் வியூஸ்களைக் குவித்து வருவதுதான் விசேஷம்.

கோவையைச் சேர்ந்த பிக்விக் என்ற அனிமேஷன் நிறுவனம்தான் இந்த அனிமேஷன் கபாலியை உருவாக்கி களத்தில் இறக்கி விட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 12 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் திறமையான இளைஞர்கள் மட்டுமல்ல, தீவிரமான ரஜினி ரசிகர்களும் கூட.

ஹலோ பாஸ் எங்களை ரஜினி வெறியர்கள்னு கூப்பிடுங்க என்று இவர்களே பாசத்துடன் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு ரஜினி என்றால் இவர்களுக்கு சுவாசம் போல. இவர்கள்தான் இந்த அனிமேஷன் கபாலியை உருவாக்கி கலக்கியுள்ளனர்.

3டியில் இந்த அனிமேஷன் கபாலியை உருவாக்கியுள்ளதாக கூறும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான தீபக் ஹரி, விஷ்ணு ராம் ஆகியோர், இதை மிகவும் சிரமப்பட்டு உருவாக்கியதாக பெருமையுடன் கூறுகின்றனர்.

திரையுலகைச் சேர்ந்த பலரும் இதைப்பார்த்து விட்ட அட என்று கூப்பிட்டுப் பாராட்டினராம். அவ்வளவு ஏன் கபாலி பட ஒளிப்பதிவாளரும் இதைப் பார்த்து விட்ட நல்லாருக்கே என்று பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி கண்ணுங்களா!

English summary
An animation verson of Kabali is rocking the Youtube. The making is a product of 12 member youngsters from Coimbatore.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil