»   »  போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்குகிறார் சிம்பு.. எமியுடன் ஒட்டி உறவாடுகிறார் அனிருத்!

போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்குகிறார் சிம்பு.. எமியுடன் ஒட்டி உறவாடுகிறார் அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் அனிருத்தையும் சர்ச்சைகளையும் என்று புதிதாக ஒரு பழமொழியை உருவாக்கலாம் போல.

அந்தளவிற்கு சர்ச்சைகளுடன் ஒட்டி உறவாடி வருகிறார் அனிருத். கடந்த 2012 ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் உதட்டை அனிருத் கவ்விப் பிடித்தது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இத்தனைக்கும் அனிருத்தைவிட ஆண்ட்ரியா வயதில் மூத்தவர். விருந்து நிகழ்ச்சியொன்றில் சக நடிகர் ஒருவர் இந்த முத்த காட்சி படங்களை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது.

இந்த முத்தகாட்சி புகைப்படங்களை இருவருமே மறுக்கவில்லை. மேலும் இது உண்மைதான் என்று இருவரும் ஒத்துக்கொண்டனர். அந்த சர்ச்சைக்குப் பின் கடந்த ஆண்டு வெளியான பீப் பாடலில் மீண்டும் அனிருத் அடிபட ஆரம்பித்தார்.

முத்தப் படங்களை விட இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போதுதான் அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார்.

ஆனால் அதற்குள் இன்னொரு சர்ச்சை உருவாகியுள்ளது. தற்போது தெறி, 2.0 ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வரும் எமி ஜாக்சனுடன் அனிருத் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு காவல் நிலையத்தில் ஏறி, இறங்க அனிருத் சந்தோஷமாக எமியுடன் சுற்றுகிறார் என்று இதனை வைத்து தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

English summary
Anirudh & Amy Jackson Close Up Photos Rounds on all Social Networks.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil