»   »  பீப் பாடல்: கோவை போலீசாரிடம் நேரில் விளக்கமளித்த அனிருத்

பீப் பாடல்: கோவை போலீசாரிடம் நேரில் விளக்கமளித்த அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் அனிருத் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முன் நேரடியாகத் தோன்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் முன் வருகின்ற 29 ம் தேதி ஆஜராகுமாறு நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Anirudh Appear to Coimbatore Police

இந்நிலையில் கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய அனிருத் நேற்று இரவு 11 மணியளவில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சென்று பீப் பாடல் விவகாரத்தில் தனது விளக்கத்தை அளித்திருக்கிறார்.

மேலும் இந்தப் பாடலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சுமார் 2 பக்கக் கடிதம் ஒன்றையும் அவர் கொடுத்திருக்கிறார்.இது குறித்து "பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசாரிடம் நேரில் தோன்றி விளக்கம் அளித்தேன்.

இந்த விவகாரத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அனிருத் கூறியிருக்கிறார்.

பீப் பாடல் விவகாரத்தில் முன்ஜாமீன் பெற்ற நடிகர் சிம்பு இன்னும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முன் ஆஜராகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Music Composer Anirudh Said " I Have Reported to the Police Station in Coimbatore and Given My Statement. Thanks to Every one to Support as always".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil