சம்பளம் அதிகம் கேட்ட அனிருத்... தட்டி உட்கார வைத்த லைகா... சீனில் வந்த ஏஆர் ரஹ்மான்…

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 170 படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் லால் சலாம்

ரஜினியின் லால் சலாம்

ஜெயிலர் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதில், ஒரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளார். 'லால் சலாம்' என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ள இந்தப் படம், கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளனர். மேலும், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத்துக்கு பதிலாக ஏஆர் ரஹ்மான்

அனிருத்துக்கு பதிலாக ஏஆர் ரஹ்மான்

லைகா தயாரிக்கும் ரஜினியின் இரண்டு படங்களுக்கும் இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஏற்கனவே பேட்டை, தர்பார் தற்போது ஜெயிலர் படங்களுக்கு இசையமைத்துள்ளார் அனிருத். அதேநேரம், சமீபத்தில் வெளியான விக்ரம், பீஸ்ட், டான் போன்ற படங்களிலும் அனிருத்தின் இசைக்கு ரசிகர்களிடம் பாராட்டு கிடைத்தது. இதனால், ரஜினியின் 2 படங்களுக்கும் இசையமைக்க மொத்தம் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன லைகா, அனிருத்தை அப்படியே ஓரம் கட்டிவிட்டதாம்.

இசைப்புயலை டிக் செய்த லைகா

இசைப்புயலை டிக் செய்த லைகா

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஏஆர் ரஹ்மானே, ஒரு படத்துக்கு 10 கோடி வரை தான் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கேற்றபடி அவரின் பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர் ஹிட் அடித்துவிடுகிறது. மேலும், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் ஆடியோ ரைட்ஸ், சர்வதேச அளவில் படத்துக்கான மார்க்கெட் வேல்யூ அதிகம். எனவே லைகா நிறுவனம் ஏஆர் ரஹ்மானை கமிட் செய்துள்ளது. சமீபத்தில் வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் படங்களில் ஏஆர் ரஹ்மான் கொடுத்த ஹிட் பற்றி கேட்கவே வேண்டாம்.

விரைவில் ஷூட்டிங்

விரைவில் ஷூட்டிங்

தலைவர் 170 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேநேரம் தலைவர் 171 படத்தின் இயக்குநர் யார் என இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. அதனால், அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கலாம் என்றும், இதில் ரஜினியே ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X