Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இவருக்கே அரபிக் குத்து வரலியாமே... அப்போ விஜய்யை தவிர யாராலையும் முடியாதா ?
சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து தான் இப்போ பட்டி தொட்டியெல்லாம் டிரெண்ட் ஆகி உள்ளது. யூட்யூப்பில் தான் அப்படி என பார்த்தால், சோஷியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் அரபிக் குத்தாக தான் இருக்கு.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பல மாதங்களாக பீஸ்ட் அப்டேட் எப்போது வரும், ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடுங்க என கேட்டு வந்ததால் ஒரு வழியாக ஒரு அசத்தல் ப்ரோமோவை வெளியிட்டு ஆர்வ தீயை பற்றி வைத்தது சன் பிக்சர்ஸ். அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் இருக்கும் இந்த ப்ரோமோ வெளியானதில் இருந்தே, எல்லோரும் அது என்னப்பா அரபிக்குத்து என கேட்டு வந்தனர்.
அரபிக்குத்துக்கு எப்படி ஆடனும் தெரியுமா... கடலையே சூடாக்கிய பீஸ்ட் நாயகி

வாத்தி கம்மிங்கையே மிஞ்சிடுச்சு
பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கி, மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங்கையே மிஞ்சி விடும் என்றார்கள். ஆனால் அப்போதெல்லாம், ஓவர் பில்ட்அப்பாக இருக்கே என அனைவரும் கூறினார்கள். ஆனால் அது உண்மை தான் என அந்த பாடல் நிரூபித்து விட்டது. அர்த்தம் புரியாவிட்டாலும் இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து, தன்னை அறியாமல் ஆட்டம் போட வைத்து விட்டது. ஹலமதி ஹபிபோ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி மூன்று நாட்கள் ஆகி விட்டது ஆனாலும் இதன் வைப் கொஞ்சமும் குறையாமல் அதிகரித்து வருகிறது.

எங்கும் அரபிக்குத்து தான்
சின்னத்திரை, சினிமா என பாகுபாடு இல்லாமல் எல்லா பிரபலங்களும் அரபிக்குத்து பாடலில் விஜய் போட்ட ஸ்டெப்பை ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். யாரை பார்த்தாலும் அரபிக்குத்தாகவே இருக்கு. மற்றவர்கள் தான் இதற்கு ஆடுகிறார்கள் என்றால், இந்த பாட்டில் விஜய்யுடன் ஆடிய பூஜா ஹெக்டேவும் அரபிக்குத்திற்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு அசத்தி உள்ளார்.

அட இவரும் ஆடிட்டாரா
பூஜா மட்டும் இல்லை இன்று, இந்த பாட்டிற்கு இசையமைத்த அனிருத்தும் அரபிக்குத்துக்கு டான்ஸ் ஆடி, வீடியோ வெளியிட்டுள்ளார். அதுவும் தனியாக இல்லை. தனது டீம்முடன் சேர்ந்து. இதற்கு எக்கச்சக்கமாக லைக்குகள் ஒரு பக்கம் குவிந்து வருகிறது. இருந்தாலும் அனிருத் போட்ட கேப்ஷன் தான் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
Recommended Video

எனக்கு வரலியேப்பா
அனிருத் பதிவிட்டுள்ள கேப்ஷனில், இது ஐந்தாவது டேக். அப்படியும் சரியாக வரவில்லை என தெரிவித்துள்ளார். இதை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள், இவருக்கே அரபிக்குத்து வரலியா. அப்போ அந்த ஸ்டெப்பை சரியா போட தெரிந்த ஒரே ஆள் விஜய் மட்டும் தானா என ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக இருந்தாலும் அனிருத்திற்கு டான்ஸ் ஒன்றும் புதிதல்ல. அவர் பல மியூசிக் வீடியோ, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் டூ டூட்டூ பாடலுக்கும் ஆடி உள்ளார். அவருக்கே ஐந்து டேக் போயும் வரவில்லையா என கேட்டு வருகிறார்கள்.