»   »  மங்காத்தாவை மனதில் வைத்து விவேகத்திற்காக தீயாக வேலை செய்யும் அனிருத்

மங்காத்தாவை மனதில் வைத்து விவேகத்திற்காக தீயாக வேலை செய்யும் அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் தீம் மியூசிக் மங்காத்தா மியூசிக்கை விட அம்சமாக இருக்க வேண்டும் என நினைத்து அனிருத் தீயாக வேலை செய்து வருகிறாராம்.

அஜீத் சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்க உள்ளது. அஜீத் மனைவியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சர்வதேச மாபியாவிடம் சிக்கும் அக்ஷரா ஹாஸனை இன்டர்போல் அதிகாரியான அஜீத் காப்பாற்றுகிறாராம்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்கள் யாராலும் அதை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. காரணம் தல முதல் முறையாக சிக்ஸ் பேக் வைத்து மிரட்டியுள்ளார்.

அனிருத்

அனிருத்

அஜீத்தின் வேதாளம் படத்திற்கு இசையமைத்த அனிருத் தான் விவேகம் படத்திற்கும் இசை பொறுப்பை ஏற்றுள்ளார். வேதாளத்தை விட விவேகம் பட இசை சிறப்பாக வர வேண்டும் என்று அனிருத் விரும்புகிறாராம்.

மங்காத்தா

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் வரும் தீம் மியூசிக் மிரட்டலாக இருந்தது. அதை விட விவேகம் தீம் மியூசிக் மெர்சலாக வர தீயாக வேலை செய்கிறாராம் அனிருத்.

அஜீத்

அஜீத்

அஜீத் சிக்ஸ் பேக் காட்டி நடந்து வரும்போது பின்னணியில் மிரட்டலான இசையை கொடுக்க நினைத்து வேலை செய்து கொண்டிருக்கிறாராம் அனிருத். இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Anirudh is working hard to beat Mankatha BGM in Ajith's upcoming movie Vivegam being directed by Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil