»   »  சந்தோஷ் நாராயணனுக்கு என்ன ஆச்சு..? திடீர் கூட்டணி மாற்றம் ஏன்?

சந்தோஷ் நாராயணனுக்கு என்ன ஆச்சு..? திடீர் கூட்டணி மாற்றம் ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அனிருத் இசையில் தெறிக்க விடப்போகும் ரஜினியின் அடுத்த படம்- வீடியோ

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு வழக்கமாக இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தில் இசையமைக்காதது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அது மட்டுமின்றி, ரஜினியின் 'கபாலி', 'காலா' படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தில் இசையமைக்காததும் ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் என கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அனிருத் இசை

அனிருத் இசை

இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை தயாரிப்புக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலமாக சூப்பர்ஸ்டாருடன் முதன்முறையாக இணைந்திருக்கிறார் அனிருத்.

ஆஸ்தான இசையமைப்பாளர்

ஆஸ்தான இசையமைப்பாளர்

கார்த்திக் சுப்புராஜ் முன்பு இயக்கிய 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' ஆகிய படங்களுக்கும், அவர் தயாரித்த 'மேயாத மான்' படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்தார். இன்னும் சொல்லப்போனால், பிரபுதேவாவை வைத்து இயக்கி வரும் 'மெர்க்குரி' படத்திலும் கூட சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பாளர்.

இசையமைப்பாளர் மாற்றம்

இசையமைப்பாளர் மாற்றம்

இருவரின் கூட்டணி சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, ரஜினியுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைந்திருக்கும் புதிய படத்திலும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்திற்கு அனிருத் ஒப்பந்தமானது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

புதிய கூட்டணி

புதிய கூட்டணி

சந்தோஷ் நாராயணனுடன் வரிசையாக படங்களில் இணைந்ததால் மாற்றம் விரும்பி அனிருத்தை புக் செய்திருக்கலாம். ரஜினி நடித்த 'கபாலி', விரைவில் வெளியாகவிருக்கும் 'காலா' ஆகிய படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசை என்பதால் புதிதாக அனிருத்தை விரும்பியிருக்கலாம்.

English summary
Santhosh Narayanan, who is usually composed for Karthik subbaraj film, has not been compassionate in this new film. The reason for this is confused his fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil