»   »  இளையராஜாவுக்குப் பின் அனிருத்தைப் பிடிக்கிறது - விவேக்

இளையராஜாவுக்குப் பின் அனிருத்தைப் பிடிக்கிறது - விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவுக்குப் பின் அனிருத்தின் இசை பிடித்திருப்பதாக நடிகர் விவேக் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம்வந்த விவேக் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். காஷ்மோரா, ரம் படங்களில் நடித்து வரும் விவேக் அப்படங்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Anirudh is my favourite in the current generation says Vivek

''காஷ்மோரா படத்தில் கார்த்தியின் அப்பாவாக முத்துராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரகசியங்களை பாதுகாக்க முடியாத போலீஸாக நான் வரும் காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் சிரிக்க வைக்கும்.

தற்போதைய ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கின்றனர். வெளிநாட்டுப் படங்களில் உள்ள காட்சிகளைத் தழுவி எடுத்திருந்தால் அதனை எளிதாகக் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ரசிகர்களின் இந்த புத்திசாலித்தனம் தற்போது வெளிவரும் படங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் பெரிய நடிகர், பிடித்த நட்சத்திரம் என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை.

தங்களின் மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்கின்றனர். சில நேரங்களில் மீம்ஸ்கள் மூலம் படைப்பாளிகளை விட தங்களுக்கு அதிக நகைச்சுவை உணர்வு இருக்கிறது என ரசிகர்கள் உணர்த்தி விடுகின்றனர்.

நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரியும்.தற்போதுள்ள இசையமைப்பாளர்களில் அனிருத்தின் இசை என்னைக் கவர்ந்துள்ளது.

அனிருத்தின் இசை ஒரு படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்வதாக உணர்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

English summary
"I have always been a fanatic fan of Ilaiyaraaja. However, Anirudh is my favorite in the current generation'' Actor Vivek says in Recent Interview.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil