»   »  "பீப்"பு கிடக்குது ஒருபக்கம்... காதலர் தினத்தன்று புதிய பாடலை வெளியிடும் "கனடா" அனிருத்

"பீப்"பு கிடக்குது ஒருபக்கம்... காதலர் தினத்தன்று புதிய பாடலை வெளியிடும் "கனடா" அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினத்தன்று புதிய பாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடலுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இது தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்றிந்த அனிருத், கைது பயத்தால் அங்கேயே தங்கி விட்டார்.

புதிய பாடல்...

இந்நிலையில், வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு புதிய பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார் அனிருத்.

காதலர் தினத்தன்று...

காதலர் தினத்தன்று...

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வழக்கம்போல இந்தாண்டும் காதலர் தினத்தன்று புதிய பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

ஏற்கனவே பீப் பாடல் சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அனிருத் புதிய பாடல் ஒன்றை வெளியிட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாடலை தற்போதே அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

படங்கள்...

படங்கள்...

பீப் பாடல் பிரச்சினையால் கைவசமிருந்த பலப் படங்களை அனிருத் இழந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Anirudh after a long time has tweeted about his Valentine day plans
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil