»   »  அனிருத் இசையில் தனுஷின் தம்பி நடிக்கும் 'ரம்'

அனிருத் இசையில் தனுஷின் தம்பி நடிக்கும் 'ரம்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைப்பைப் படித்ததும் தனுஷிற்கு தம்பி ஏது? என்று அதிர்ச்சியடைந்து விடாதீர்கள். வேலையில்லாப் பட்டதாரி படத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக நடித்த ரிஷிகேஷ் தான் அந்தத் தம்பி.

வேலையில்லாப் பட்டதாரி படத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக வந்த ரிஷிகேஷை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதிலும் படத்தில் இவர் பேசும் "அண்ணே நான் போறேன்னு தான் சொன்னேன் அப்பாதான் வேணாமுன்னு சொன்னாரு".

Anirudh's Next Movie Rum

என்ற வசனமும் படத்தில் இவர் காட்டிய பெர்பாமென்ஸும் தற்போது இவரை அடுத்த லெவலுக்கு தற்போது கொண்டு சென்றிருக்கின்றன. ஆமாம் ரிஷிகேஷ் தற்போது கோலிவுட் ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இவர் நடித்து வரும் புதிய படத்திற்கு 'ரம்' என்று பெயர் வைத்திருக்கின்றனர். இதில் இவருக்கு ஜோடியாக சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி மற்றும் அமரகாவியம் மியா ஜார்ஜ் இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

'தங்கமகன்' படத்திற்குப் பின் ஏற்பட்ட பீப் பாடல் பிரச்சினையால் வரிசையாக படங்கள் அனிருத் கையிலிருந்து நழுவின. இந்நிலையில் அந்த பிரச்சினைக்குப் பின்னர் அனிருத் 'ரம்' படத்திற்கு இசையமைப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.

மேலும் வேலையில்லாப் பட்டதாரி படத்தில் நடித்த விவேக் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். சாய் பரத் இயக்கி வரும் இப்படத்தை 'மசாலா படம்' புகழ் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அனிருத் ரிஷிகேஷை தனது தம்பி என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வேலையில்லாப் பட்டதாரி போல நிஜ வாழ்க்கையிலும் தனுஷிற்கு போட்டியாக மாறுவாரா ரிஷிகேஷ்? பார்க்கலாம்.

English summary
Anirudh's Next Movie Rum.He Tweeted "Happy to score for my brother hrishikeshkk and his new young team.. rumthemovie Actor_Vivek".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil